பட்டணவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

09:55, 2 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

பட்டணவர் (Pattanavar) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான, தமிழ்நாட்டில் வாழுகின்ற ஒரு மீனவ சமூகத்தினர் ஆவர். இவர்கள் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் போன்ற சோழ மண்டலக் கடற்கரை பகுதியில், ஆதிக்கம் செலுத்தும் சமூகமாக, பாரம்பரியமாக மீன்பிடித்தல், கப்பல் போக்குவரத்து, கடற்படை மற்றும் வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.[2][3][4]

பட்டணவர்
மதங்கள்இந்து, கிறிஸ்தவம்
மொழிகள்தமிழ்
உட்பிரிவுகள்
  • பெரிய பட்டணவர்
  • சின்ன பட்டணவர்
  • கரையார்
[1]
தொடர்புடைய குழுக்கள்தமிழர், கரையார், கரவா

சொற்பிறப்பு

பட்டணவர் என்ற சொல்லுக்கு ஒரு பட்டினத்தில் வசிப்பவர் என்று பொருள். முன்னொரு காலத்திலிருந்து பட்டினம் என்ற சொல் துறைமுக நகரத்தை குறிக்க வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நாகப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம் மற்றும் சென்னப்பட்டினம் போன்ற பெயர்கள் வைக்கப்பட்டது.[5][6] இவர்களுள் பெரிய பட்டணவர் மற்றும் சின்ன பட்டணவர் என பிரிக்கப்பட்டுள்ளன. பெரிய என்ற சொல்லுக்கு "பெரியது" என்றும், சின்ன என்ற சொல்லுக்கு "சிறியது" என்றும் பொருள்படும், அங்கு பெரிய பட்டணவர், சின்ன பட்டணவரை விட சமூக ரீதியாக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது..[7]

பட்டணவர்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் கரையார் என்று அழைக்கப்படுகின்றனர், இவர்கள் இச்சமூகத்தின் துணைப்பிரிவுகளில் ஒன்றாகும்.[4] கரையார் என்றால் "கடற்கரை மக்கள்" என்று பொருள். இது இலங்கையில் உள்ள மீனவ சாதியினரும் பயன்படுத்தும் சொல்லாகும். படையாச்சி என்ற துணைக்குழுவின் பெயர் "இராணுவத்தின் ஆட்சியாளர்" என்று பொருள்படும்.[8]

மேற்கோள்கள்

  1. Pārati, Paktavatcala (1999) (in en). Coromandel fishermen: an ethnography of Paṭṭaṇavar subcaste. Pondicherry Institute of Linguistics and Culture. பக். 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185452098. https://books.google.com/?id=uw9uAAAAMAAJ. 
  2. Sudarsen, V.; Selvaraj, B.; Raj, A. Xavier (1995) (in en). Knowledge of the Sea: Some Maritime Communities in India. PPST Foundation. பக். 4. https://books.google.com/books?id=AiyBAAAAMAAJ. 
  3. Grewal, J. S.; Culture, Project of History of Indian Science, Philosophy, and (2005) (in en). The State and Society in Medieval India. Oxford University Press. பக். 206. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780195667202. https://books.google.com/books?id=cgluAAAAMAAJ. 
  4. 4.0 4.1 Pārati, Paktavatcala (1999) (in en). Coromandel fishermen: an ethnography of Paṭṭaṇavar subcaste. Pondicherry Institute of Linguistics and Culture. பக். 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185452098. https://books.google.com/?id=uw9uAAAAMAAJ. 
  5. Raghavan, M. D. (1971) (in en). Tamil culture in Ceylon: a general introduction. Kalai Nilayam. பக். 141. https://books.google.com/books?id=Fb4LAAAAIAAJ. 
  6. Kōvintacāmi, Mu (1977) (in en). A Survey of the Sources for the History of Tamil Literature. Annamalai University. பக். 93. https://books.google.com/books?id=iHwOAAAAYAAJ. 
  7. Hollen, Cecilia Coale Van (1998) (in en). Birthing on the Threshold: Childbirth and Modernity Among Lower Class Women in Tamil Nadu, South India. University of California, Berkeley with the University of California, San Francisco. பக். 23. https://books.google.com/books?id=Lw9NAQAAMAAJ. 
  8. Ramasamy, K. (1978) (in en). Padayachi Dialect of Tamil. Annamalai University. பக். i. https://books.google.com/books?id=qwnrAAAAIAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டணவர்&oldid=2944158" இலிருந்து மீள்விக்கப்பட்டது