"ம. கோ. இராமச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
ம. கோ. இரா. இரண்டாவது கதாநாயகனாகத் [[தியாகராஜ பாகவதர்]] தயாரித்த [[ராஜ முக்தி]] படத்தில் நடித்தார். அப்படத்தில் [[ஜானகி இராமச்சந்திரன்|வைக்கம் நாராயணி ஜானகி]] என்னும் வி. என். ஜானகி கதாநாயகியாக நடித்தார். அவர் ம. கோ. இரா.வின் முதல் மனைவியான தங்கமணி சாயலில் இருந்தார். இதனால் ஜானகியின் மீது ம. கோ. இரா.விற்கு ஈர்ப்பு ஏற்பட்டது.
 
அவ்வீர்ப்பு [[மோகினி (திரைப்படம்)|மோகினி]] படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் [[மருதநாட்டு இளவரசி]] படத்தில் கதைத் தலைவனாக ம. கோ. இரா.வும் கதைத்தலைவியாக ஜானகியும் நடிக்கும்பொழுது காதலாக மாறியது. அக்காலகட்டத்தில் ம. கோ. இரா.வால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகியின் முதற்கணவரான கணபதிபட்டிக் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த ம. கோ. இரா.வின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். ம. கோ. இரா. அவரைத் தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். [[கேரளா]]வில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் ம. கோ. இரா.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை ம. கோ. இரா. தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்.<ref name="d">எம்.ஜி.ஆர்.; நான் ஏன் பிறந்தேன்; ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்</ref> இத்திருமணத்தை ம. கோ. இரா.வின் அண்ணனும் நடிகருமான [[எம். ஜி. சக்கரபாணி|ம. கோ. சக்ரபாணி]]யும், குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர். எனினும் ம. கோ. இரா.வின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உயிரோடு இருந்ததால் தம் திருமணத்தைப் பதிவுசெய்து கொள்ளாமலேயே ம. கோ. இரா.வும் ஜானகியும் உடனுறைந்தனர் (Lived Together). 12 ஆண்டுகள் கழித்து [[1962]] [[பிப்ரவரி 25]] ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் [[சூன் 14]]ஆம் நாள் ம. கோ. இரா.வும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டிலிருந்து வெளியேறி இராமவரம்இராமாவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர்.<ref name="a">எஸ்.வி., நாடாள வந்த ஜானகியின் கதை, தேவி வார இதழ் 20-1-1988, பக்.4</ref>
 
=== வளர்ப்பு குழந்தைகள் ===
296

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2944820" இருந்து மீள்விக்கப்பட்டது