விக்கிப்பீடியா பேச்சு:சத்திய சோதனை போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
போட்டித் திட்டத்தைக் கைவிட வேண்டுகோள்
No edit summary
 
வரிசை 10:
::போட்டியின் பெயர், அதனை நடத்தும் அமைப்பு, அவர்கள் பங்களிப்பு ஆகியவற்றை நோக்கும் முன் இந்த ஊரடங்கு நேரத்தில், அதனை முன்வைத்து ஒரு போட்டி நடத்துவதே எனக்கு ஏற்பு இல்லை. இது குறித்து ஆலமரத்தடியிலும் கருத்து தெரிவித்து உள்ளேன்.
::விக்கிப்பீடியா என்பது ஒரு உலகளாவிய brand value உள்ள திட்டம். இந்த brandஐ எப்படி முறையாகப் பயன்படுத்துவது என்று விக்கிமீடியா அறக்கட்டளை வழிகாட்டல்கள் உள்ளன. அதனுடன் மற்ற அமைப்புகள் சேர்ந்து ஒரு திட்டத்தை முன்னெடுக்கிறது என்றால், விக்கிப்பீடியாவால் செய்ய முடியாத ஒன்றினை அவர்கள் பங்களிப்பதாக இருக்க வேண்டும். அரசுகள், பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள், கூகுள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பங்காற்றும் போது, இந்தப் பங்களிப்புத் தெளிவாக அமைகிறது. இந்தப் போட்டியின் வரைவை நோக்கும் போது, அப்படி நம்மால் செய்ய முடியாத ஒன்றை எந்த ஒரு வெளி அமைப்பும் செய்ய முடிவதாக ஒன்றும் தோன்றவில்லை. பரிசு, பரப்புரை ஆகியவை நாம் செய்யக்கூடியவையே. எல்லா போட்டிகளுக்கும் தன்னார்வலர்கள், நிறுவனங்கள் பரப்புரையில் உதவுவது போலவே இந்த அமைப்பும் உதவலாம். அறியப்படாத வெளி நிறுவனங்களுடன் தேவை இன்றி கூட்டாக இணைந்து போட்டிகள் நடத்துவது அவர்களுக்கான இலவச விளம்பரமாக அமைந்து விடக் கூடாது. அதை விட முக்கியம், யார், என்ன என்று அறியாமல் கூட்டுறவை மேற்கொள்ள நேரிட்டால் அவர்களின் செயற்பாடுக்கு விக்கிப்பீடியாவும் பொறுப்பேற்றது போல் ஆகி விடும். எனவே, தற்போது இப்போட்டித் திட்டத்தைக் கைவிடலாம் என்று கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 11:31, 31 மார்ச் 2020 (UTC)
::பயனர்கள் வேறு யாரும் ஆர்வம் கொள்ளாததால் இத்திட்டத்தைக் கைவிடுவோம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 02:30, 6 ஏப்ரல் 2020 (UTC)
Return to the project page "சத்திய சோதனை போட்டி".