சிவகாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Changed protection level for "சிவகாசி": தேவையற்ற தொகுத்தல் போர் ([தொகுத்தல்=நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்] (15:13, 14 மார்ச் 2020 (UTC) மணிக்கு காலாவதியாகிறது) [நகர்த்தல்=நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்] (15:13, 14 மார்ச் 2020 (UTC) மணிக்கு காலாவதியாகிறது))
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அந்தமான் - link(s) தொடுப்புகள் அந்தமான் தீவுகள் உக்கு மாற்றப்பட்டன
வரிசை 67:
சிவகாசி [[பட்டாசு]] தொழிலுக்கு புகழ்பெற்ற ஊராகும். இங்கு [[தீப்பெட்டி]] தொழிற்சாலைகளும் பட்டாசு தொழிற்சாலைகளும் சிறியதும் பெரியதுமாக நிறைய இருக்கின்றன. சிவகாசி [[அச்சுக்கலை|அச்சு]] தொழிலுக்கும் பெயர்பெற்ற ஊராகும். இது குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படுகிறது. 1960களில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அன்று இருந்த தேசிய பொருளாதார நிலையின்மையிலும் இந்த ஊரில் வசிக்கும் மக்கள் தங்களின் தொழில் திறனை வைத்து ஸ்திரமான நிலையினை தக்க வைத்துகொண்டனர். [[இந்தியா]]வின் தீப்பெட்டி உற்பத்தியில் 80% தீப்பெட்டிகள் இந்த ஊரில் தான் தயார் செய்யப்படுகின்றன. மேலும் இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில் 90% சிவகாசியில் தான் தயாராகின்றன. மேலும் இந்தியாவின் அச்சுத்துறையில் 60% இங்கு செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஊர் மக்களுக்கு 100% வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 1980களில் இந்த ஊரில் குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருந்ததாக கணக்கிடப்பட்டு இப்போது அது முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது.
 
சிவகாசி நகரமானது மூன்று முக்கிய தொழில்களைச் சார்ந்துள்ளது: பட்டாசுகள், தீப்பெட்டி உற்பத்தி மற்றும் அச்சிடுதல் போன்றவையாகும். இந்த நகரத்தில் 520 பதிவு செய்யப்பட்ட அச்சிடும் தொழில்கள், 53 தீப்பெட்டி தொழிற்சாலைகள், 32 இரசாயன தொழிற்சாலைகள், ஏழு சோடா தொழிற்சாலைகள், நான்கு மாவு ஆலைகள் மற்றும் இரண்டு அரிசி மற்றும் எண்ணெய் ஆலைகள் உள்ளன. இந்த நகரம் தேசிய அளவில் பட்டாசு உற்பத்திக்கான ஒரு முக்கிய நகரமாக திகழ்கிறது. 2011 ஆம் ஆண்டில், இந்தத் தொழிலில் 25,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் ஆண்டு வருமானம் 5 பில்லியன் டாலர் (அமெரிக்க $ 72 மில்லியன்) ஆகும். 2011 ஆம் ஆண்டில், நகரத்தில் பட்டாசு, தீப்பெட்டி தயாரித்தல் மற்றும் அச்சிடும் துறையின் மொத்த வருவாய் சுமார் 20 பில்லியன் (அமெரிக்க $ 290 மில்லியன்) ஆகும். இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் மற்றும் தீப்பெட்டிகள் ஏறத்தாழ 70% சிவகாசியிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. நகரத்தின் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலை பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில்களுக்கு உகந்ததாகும். இந்தத் தொழில்களுக்கான மூலப்பொருட்கள் முன்னதாக [[சாத்தூர்|சத்தூரிலிருந்து]] வாங்கப்பட்டன, ஆனால் அதிக உற்பத்தி செலவு காரணமாக அவை நிறுத்தப்பட்டன.<ref name="abtcity">{{cite web|title=About city|url=http://municipality.tn.gov.in/sivakasi/abt_City.htm|publisher=Sivakasi municipality|accessdate=2012-12-29|year=2011|ref=|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20120419235949/http://municipality.tn.gov.in/sivakasi/abt_City.htm|archivedate=19 April 2012|df=dmy-all}}</ref> தற்போது மூலப்பொருட்களின் [[கேரளா]] மற்றும் [[அந்தமான் தீவுகள்|அந்தமான்]] ஆகிய நகரங்களிலிருந்து வாங்கப்படுகிறது. அச்சிடும் தொழிலுக்கான காகிதம் பல்வேறு மாநிலங்களிலிருந்து வாங்கப்படுகிறது. இந்த நகரம் தினக்குறிப்புப்புத்தகம் தயாரிப்பதில் முக்கின பங்கு வகிக்கிறது. இது இந்தியாவில் தயாரிக்கப்படும் மொத்த தினக்குறிப்புப்புத்தகம் 30% இங்கு தான் தயாரிக்கப்படுகிறது. இந்நகரத்தில் அச்சிடும் தொழில் ஆரம்பத்தில் பட்டாசுகளுக்கான லேபிள்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் நவீன இயந்திரங்களுடன் பரிணாமம் அடைந்து அச்சிடும் மையமாக வளர்ந்தது. 2012 ஆம் ஆண்டில், அனைத்து தொழில்களும் மின் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர் செலவு அதிகரிப்பதால் 15-20% உற்பத்தி இழப்பை சந்தித்தன.
 
== கல்வி நிலையங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிவகாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது