ஈ. வெ. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Ravidreamsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கங்கை - link(s) தொடுப்புகள் கங்கை ஆறு உக்கு மாற்றப்பட்டன
வரிசை 40:
 
=== காசிப் பயணம் ===
[[1904]] இல் இராமசாமி [[இந்து சமயம்|இந்துக்களின்]] புனிதத் தலமாகக் கருதப்படும் [[காசி]]க்கு புனிதப் பயணியாக, காசி விசுவநாதரை<ref name=Diehl-1 /><ref name="Periyar" /> தரிசிக்கச் சென்றார், அங்கு நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள், பிச்சை எடுத்தல், [[கங்கை ஆறு|கங்கை]] ஆற்றில் மிதக்கவிடப்படும் பிணங்கள்<ref name="Periyar" /> போன்ற அவலங்களையும், பிராமணர்களின் சுரண்டல்களையும் கண்ணுற்றவரானார்.<ref name=Diehl-1 />
 
இதனிடையே [[காசி]]யில் நடந்த ஒரு நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது. பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் ஓர் அன்னசத்திரத்தில் இராமசாமிக்கு பிரமணரல்லாதார் என்ற நிலையில் உணவு வழங்க மறுக்கப்பட்டது. இந்நிலைகண்டு மிகவும் வருத்தவமுற்றவரானார். இருப்பினும் பசியின் கொடுமை தாளமாட்டாமல் பிராமணர் போல் [[பூணூல்]] அணிந்து வலிந்து தன்னை ஒரு பிராமணர் என்று கூறி உள்நுழைய முயன்றார். ஆனால் அவர் மீசை அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது. பிராமணர் யாரும் இந்து சாத்திரத்தின்படி இவ்வளவு பெரிய [[மீசை]] வைத்திருப்பதில்லை என்று [[கோயில்]] காவலாளியால் வலிந்து தள்ளப்பட்டு வீதியில் விழுந்தார்.<ref name="Periyar" />
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது