மு. அருணாசலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2:
'''மு. அருணாசலம்''' (அக்டோபர் 29, 1909 -நவம்பர் 23, 1992) <ref>{{cite web | url=http://www.dinamani.com/editorial_articles/article954197.ece?service=print| title= அறிஞர்களின் அறிஞர் மு.அருணாசலம்| publisher=தினமணி| accessdate=10 ஏப்ரல் 2015}}</ref>), தமிழுக்கு மிக முக்கியமான பல பங்களிப்புகளைச் செய்த பெரும் தமிழறிஞர். நூற்றாண்டு வாரியாகத் [[தமிழ் இலக்கிய வரலாறு]] எழுதியவர். தமிழிசை இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கண வரலாறு ஆகியவற்றையும் இவர் எழுதியுள்ளார். [[நாகப்பட்டினம் மாவட்டம்]] திருச்சிற்றம்பலம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
== வாழ்க்கை ==
நாகை மாவட்டத்தில்(முன்பு தஞ்சை மாவட்டம்) திருச்சிற்றம்பலம் என்னும் சிற்றூரில் 1909-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி முத்தையா பிள்ளைக்கும்-கௌரியம்மாளுக்கும் மூத்த மகனாய்ப் பிறந்தார் மு.அருணாசலம். தொடக்கத்தில் திருச்சிற்றம்பலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் அடுத்து, மயிலாடுதுறை அருகே உள்ள [[குற்றாலம்குத்தாலம்]] ([[திருத்துருத்தி]]) உயர்நிலைப் பள்ளியிலும் அதன்பின் [[சிதம்பரம்]] மீனாட்சிக் கல்லூரியிலும் கல்வி கற்று, கணிதத்தில் பட்டம் பெற்றார். [[சென்னை]]யில் அரசு ஊழியராகப் பணிபுரிந்து, அதனை விடுத்து, [[காசி இந்துப் பல்கலைக்கழகம்|காசி இந்துப் பல்கலைக்கழகத்தில்]] இரண்டாண்டுகள் தத்துவப் பேராசிரியராகவும், ராஜா சர் [[முத்தையா செட்டியார்]] அமைத்த தமிழ்-வடமொழி நிறுவனத்தின் இயக்குநராகவும் நிறைவாக [[தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்|தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்]] அகராதித்துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.
 
[[தமிழ்]], [[ஆங்கிலம்]], [[சமஸ்கிருதம்]] ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்ற அருணாசலம் இலக்கிய, இலக்கண தத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும், ஓலைச்சுவடிகளைத் தேடிச் சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். மேலும், கல்வெட்டுகளைப் படிப்பதிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். பிறசமயக் காழ்ப்பற்ற சைவப்பற்று கொண்டவர்.[[மு. வரதராசனார்]], [[கா.சு.பிள்ளை]], [[உ.வே.சாமிநாதன்]], [[வையாபுரிப்பிள்ளை]], [[திரு.வி.கலியாணசுந்தரம்.]], [[ரசிகமணி டி.கே.சி]], [[வெ.சாமிநாத சர்மா]], [[கல்கி]], [[வ.ரா.]], [[கருத்திருமன்]] போன்ற தம் சமகாலத்திய தமிழறிஞர்களோடும் அரசியல் தலைவர்களோடும் நெருக்கமான பழக்கம் கொண்டிருந்தார்.காசிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது இந்தியக் குடியரசுத் தலைவராகப் பின்னர் பணியேற்ற தத்துவமேதை ராதாகிருஷ்ணனோடும் பழகியுள்ளார்.<ref name="மு.அருணாசலம்">{{cite web | url=http://www.dinamani.com/editorial_articles/article954197.ece?service=print | title=அறிஞர்களின் அறிஞர் மு.அருணாசலம் | publisher=தினமணி | date=Aug 16, 2009 | accessdate=ஏப்ரல் 10, 2015 | author=முனைவர் தெ.ஞானசுந்தரம்}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மு._அருணாசலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது