இப்னு அல் நபீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Ibn al-Nafis" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:42, 7 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

அலா அல் தீன் அபு அல்-ஹசன் அலி இப்னு அபி-ஹஸ்ம் அல்-கர்ஷி அல்-திமாஷ்கி ( அரபு : علاء الدين أبو الحسن عليّ بن أبي حزم الدمشقي,), இப்னுல் -நபிஸ் ( அரபு : ابن النفيس) என அழைக்கப்படுபவர் ஓர் மருத்துவம், அறுவை சிகிச்சை, உடலியல், உடற்கூறியல், உயிரியல், இஸ்லாமிய ஆய்வுகள், நீதித்துறை மற்றும் தத்துவம் ஆகியவற்றில் புலமை பெற்ற இவர் 13ம் நூற்றாண்டில் இசுலாமிய பொற்கால ஆட்சியில் அறிவியலாளராக திகழ்ந்தார்.இரத்தத்தின் நுரையீரல் சுழற்சியை முதலில் விவரித்தவர் இவரே . [1] வலது பக்க (நுரையீரல்) சுழற்சி தொடர்பாக இப்னுல்-நஃபிஸின் கோட்பாட்டை பின்னர் வில்லியம் ஹார்வியின் (1628) டி மோட்டு கோர்டிஸின் படைப்பு உறுதிபடுத்துகிறது. இப்னு நபீஸ் மருத்துவ உலகில் "சுவாச உடலியக்கத்தின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார் .

இப்னு அல் நபீஸ்
சுய தரவுகள்
பிறப்பு1213
இறப்பு17 டிசம்பர்வார்ப்புரு:இறந்த வருடம் மற்றும் வயது
சமயம்இசுலாம்
குறிப்பிடத்தக்க ஆக்கம்Commentary on Anatomy in Avicenna's Canon

ஆரம்பகாலத்தில் உடற்கூறியல் நிபுணராக,பல மனித உடற்கூறுகளை ஆய்வு செய்தார், [2] உடலியல் மற்றும் உடற்கூறியல் துறைகளில் பல முக்கியமான கண்டுபிடிப்புகளை செய்தார். நுரையீரல் சுழற்சி பற்றிய அவரது கண்டுபிடிப்பு தவிர, கரோனரி மற்றும் கேபிலரி சுழற்சிகள் பற்றிய ஆரம்ப கோட்பாடுகளையும் ஆய்வு முடிவுகளையும் இவ்வுலகிற்கு வழங்கினார். [3] [4] சுல்தான் சலாகுத்தீன் நிறுவிய அல்-நசேரி மருத்துவமனையில் தலைமை மருத்துவராகவும் நியமிக்கப்பட்டார்.

வாழ்க்கை

இப்னுல்-நபிஸ் 1213 இல் ஒரு அரபு குடும்பத்தில் [5] டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள கராஷியா என்ற கிராமத்தில் பிறந்தார்,தனது ஆரம்ப கால வாழ்க்கையில் இறையியல், தத்துவம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றைப் பயின்றார். பின்னர், தனது 16ம் அகவையில் , 12 ஆம் நூற்றாண்டில் நூரி மருத்துவமனையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவம் படிக்கத் தொடங்கினார். அவர் பிரபல டமாஸ்கீன் மருத்துவர் இப்னு அபி உசைபியாவுடன் சமகாலத்தில் வாழ்ந்த்து வந்தார். [6]

இப்னுல்-நபிஸ் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை எகிப்தில் வாழ்ந்தார், மேலும் மம்லூக்கின் எழுச்சியும் அய்யுபித் சுல்தானகத்தின் வீழ்ச்சியும் இவர் காலத்திலேயே நிகழ்ந்தது . முக்கிய அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட மருத்துவராகவும் , விளங்கியவர் தனது 74 வயதாக இருந்தபோது, இப்னுல்-நபிஸ் கெய்ரோவில் புதிதாக நிறுவப்பட்ட அல்-மன்சோரி மருத்துவமனையின் தலைமை மருத்துவராக நியமிக்கப்பட்டு தன் வாழ்நாள் முழுவதும் அங்கு பணியாற்றினார்.

இப்னுல்-நபிஸ் கெய்ரோவில் சில நாட்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தார். இறப்பதற்கு முன்னர்,தனது வீடு மற்றும் நூலகத்தை மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினார். [7]

நூல்கள்

 
இப்னுல்-நபிஸின் மருத்துவப் படைப்புகளில் ஒன்றின் தொடக்கப் பக்கம். இது 17 அல்லது 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட நகலாகும்.
  1. Majeed, Azeem (2005). "How Islam changed medicine". BMJ 331 (7531): 1486–1487. doi:10.1136/bmj.331.7531.1486. பப்மெட்:16373721. பப்மெட் சென்ட்ரல்:1322233. https://www.bmj.com/content/331/7531/1486. பார்த்த நாள்: 28 May 2019. 
  2. Patrice Le Floch-Prigent and Dominique Delaval (April 2014). "The discovery of the pulmonary circulation by Ibn al Nafis during the 13th century: an anatomical approach". The FASEB Journal 28. http://www.fasebj.org/content/28/1_Supplement/543.9.short. 
  3. Szasz, Theodora; Tostes, Rita C. A. (2016) (in en). Vascular Smooth Muscle Function in Hypertension. Biota Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781615046850. https://books.google.com/?id=XjZgDQAAQBAJ&pg=PA3&dq=coronary+Ibn+al-Nafis#v=onepage&q=coronary%20Ibn%20al-Nafis&f=false. 
  4. Mantzavinos, C. (2016) (in en). Explanatory Pluralism. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781107128514. https://books.google.com/?id=vXQZDAAAQBAJ&pg=PA95&dq=capillary+Ibn+al-Nafis#v=onepage&q=capillary%20Ibn%20al-Nafis&f=false. 
  5. أبو غدة, عبد الفتاح (1984). قيمة الزمن عند العلماء. مكتب المطبوعات الإسلامية – الطبعة العاشرة, حلب. பக். 73. 
  6. Prioreschi, Plinio (1996). A History of Medicine: Byzantine and Islamic medicine. Horatius Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781888456042. https://books.google.com/?id=q0IIpnov0BsC&pg=PA270&dq=ibn+al-nafis+animosity#v=snippet&q=%22Abi%20Usaibia%22%20%22al-nafis%22&f=false. 
  7. Iskandar, Albert Z.. Dictionary of Scientific Biography. பக். 602–06. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்னு_அல்_நபீஸ்&oldid=2947546" இலிருந்து மீள்விக்கப்பட்டது