"சிவகாசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

52 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி
இது [[சிவகாசி (சட்டமன்றத் தொகுதி)|சிவகாசி]] சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. 1977 ஆம் ஆண்டு முதல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]](அதிமுக) ஐந்து முறையும்(1980, 1984, 1991, 2011 மற்றும் 2016 தேர்தல்களில்), தமிழ் மாநில காங்கிரஸ்(தமாக) இரண்டு முறையும்(1996, 2001), [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகம்]](திமுக) ஒரு முறையும் (1989), ஜனதா கட்சி ஒரு முறையும் (1977), மற்றும் [[மதிமுக|மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்]](மதிமுக) ஒரு முறையும் (2006) வென்றுள்ளன. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர், [[அதிமுக]]வைச் சேர்ந்த [[கே. டி. ராஜேந்திர பாலாஜி]] ஆவார்.
 
சிவகாசி தற்போது [[விருதுநகர் மக்களவைத் தொகுதி]]யின் கீழ் வருகிறது. இதற்கு முன்பு [[சிவகாசி மக்களவைத் தொகுதி|சிவகாசி]] ஒரு மக்களவைத் தொகுதியாக இருந்தது. தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான சிவகாசி மக்களவைத் தொகுதியும் ஒன்றாகும். சிவகாசி, சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி, சிறீவில்லிப்புத்தூர், இராசபாளையம் (தனி) ஆகியவை இதற்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகள் ஆகும். பின்னர் சிவகாசி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம் ஆகிய சட்டசபை தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டு, [[விருதுநகர் மக்களவைத் தொகுதி]]களில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் [[இதேகா|காங்கிரஸ்]] கட்சியை சேர்ந்த [[பா.மாணிக்தாகூர்மாணிக்கம் தாகூர்]] ஆவார்.
 
== போக்குவரத்து ==
[[File:Sivakasi Railway Station.jpg|thumb]]
 
சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து, [[சிவகாசி தொடருந்து நிலையம்|சிவகாசி இரயில் நிலையமானது]] சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது. சிவகாசி தொடருந்து நிலையமானது [[மதுரை]] - [[செங்கோட்டை]] - [[கொல்லம்]] வழிதடத்தில் அமைந்துள்ளது. இது விருதுநகர் [[இராஜபாளையம்]] மற்றும் [[செங்கோட்டை]], [[கொல்லம்]] வழியாக தமிழகத்தை [[கேரளா]]வுடன் இணைக்கிறது. [[பொதிகை விரைவுத் தொடருந்து|பொதிகை அதிவிரைவு இரயிலானது]] சிவகாசி வழியாக [[செங்கோட்டை]] முதல் [[சென்னை எழும்பூர்]] வரை செல்கிறது. [[சிலம்பு விரைவுத் தொடருந்து|சிலம்பு]], [[கொல்லம் விரைவுத் தொடருந்து|கொல்லம்]] விரைவு இரயில்களும் சிவகாசி வழியாக செல்லுகின்றன. மேலும் [[மதுரை]] - [[செங்கோட்டை]] பயணிகள் தொடருந்துகளும் செல்கின்றன. மற்ற அனைத்து விரைவு இரயில்களும், விருதுநகர் தொடருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
 
== சுற்றுலா மற்றும் ஆன்மீக தலங்கள ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2948328" இருந்து மீள்விக்கப்பட்டது