அரப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 66:
#பிற்கால அரப்பாவின் கட்டம், கி.மு. 1800 – 1300 
 
அரப்பா அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களிலேயே மிகவும் நேர்த்தியான ஆனால் புரிபடாத கைவினைப்பொருள்கள் மனித வடிவமோ அல்லது விலங்கு வடிவமோ பொறித்த சிறிய நாற்கட்ட முத்திரைகள்தாம். மொகஞ்ச-தாரோவிலும் அரப்பாவிலும் எண்ணற்ற முத்திரைகள் கிடைத்திருக்கின்றன. அவற்றில் பலவற்றில் படவடிவில் உள்ள பொறிப்புகள் ஒரு விதமான வரிவடிவம் அல்லது எழுத்து என்று ஆய்வாளர்கள் சிலரால் கருதப்படுகிறது. அவை எழுத்தே அல்ல என்று வேறு சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். உலகெங்கிலுமிருந்து பல மொழியறிவாளர்கள் முயன்ற போதிலும், தற்கால மறைப்பியல் பகுப்பாய்வை மேற்கொண்ட போதிலும் இந்த முத்திரைச் சின்னங்களின் மறைப்பு நீக்கம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படாத புரிபடாத சின்னங்களாகத்தான் இருக்கிறது. அவை வரிவடிவமாக இருந்தால் எந்த மொழியின் எழுத்துகள் என்பதிலும் சச்சரவு நீடிக்கிறது. அவை உண்மையிலேயே முந்தைய திராவிடதமிழ் மொழியின்மொழி எழுத்துகளா, வேதிய மொழியின் எழுத்துகளா அல்லது முண்டா அல்லது வேறு மொழியின் எழுத்துகளா என்பதிலும் தெளிவு இல்லை. சிந்து வெளிப் பண்பாட்டின் சிலைவடிவங்களையும் வரிவடிவங்களையும் வரலாற்றுக்கால தெற்காசியப் பண்பாடுகளோடு பொருத்திப் பார்ப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. தெற்காசியா ஆய்வாளர்களின் அரசியல், பண்பாட்டுப் பின்னணியும், அவர்கள் முன்மொழியும் கருத்துகளும் பின்னிப் பிணைந்திருப்பதும் இதற்குக் காரணம். பாக்கிஸ்தான் ஆய்வாளர்கள் கருத்துகளும், இந்தியாவின் ஆரிய, திராவிடதமிழ் மொழிக்குடும்பத்திலிருந்து வரும் ஆய்வாளர்களின் கருத்துகளும் ஒருவரோடொருவர் பெரிதும் முரண்படுவது தெளிவு.
 
பெப்ரவரி 2006 இல் தமிழ்நாட்டிலுள்ள செம்பியன் - கண்டியூர் என்ற சிற்றூரில் ஒரு பள்ளியாசிரியர் கண்டுபிடித்த கற்கோடரியில் 3500 ஆண்டுகள் பழைமையானது என்று கணிக்கப்பட்ட பொறிப்புச் சின்னங்கள் ஆய்வுலகில் பரபரப்பேற்படுத்தின.<ref name="The Hindu_century">{{cite news | last=Subramaniam | first=T. S. | title= "Discovery of a century" in Tamil Nadu | date=May 1, 2006 | url =http://www.hindu.com/2006/05/01/stories/2006050112670100.htm | work =The Hindu | accessdate = 2008-05-21}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அரப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது