"தமிழ் மாநில காங்கிரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

147 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''தமிழ் மாநில காங்கிரஸ்''' (தமாகா) 1996-2002ல் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். இதன் தேர்தல் சின்னம் மிதிவண்டி (சைக்கிள்).
 
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996]] சட்டமன்றத் தேர்தலில் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசின்]] தேசியத் தலைவர் [[பி. வி. நரசிம்ம ராவ்]] [[அதிமுக]]வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். ஆனால் காங்கிரசின் தமிழ் நாட்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களில் பெரும்பாலானோர் இதனை எதிர்த்தனர். [[ஜி. கே. மூப்பனார்]] தலைமையில் பிரிந்து சென்று ”தமிழ் மாநில காங்கிரசு” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். <ref>{{cite journal |last1=கல்கி |journal=கல்கி |date=03/05/2020 |volume=78 |issue=40 |page=6 |accessdate=27 April 2020}}</ref>
 
தமாக 1996 சட்டமன்றத் தேர்தலில் [[திமுக]]வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 39 இடங்களில் வெற்றி பெற்றது. இத்தேர்தலுடன் நடந்த [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996|நாடாளுமன்றத் தேர்தலிலும்]] திமுகவுடன் இணைந்து போட்டியிட்டு 20 இடங்களில் வென்றது. 1996-98 காலகட்டத்தில் [[ஐக்கிய முன்னணி (இந்தியா)|ஐக்கிய முன்னணி]] கூட்டணி அரசுகளில் அங்கம் வகித்தது. இக்கட்சியின் [[ப. சிதம்பரம்]], எம். அருணாச்சலம், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பணியாற்றினர். [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1998| 1998 நாடாளுமன்றத் தேர்தலிலும்]] திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் 3 இடங்களில் மட்டுமே வென்றது. [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999| 1999 நாடாளுமன்றத் தேர்தலில்]] திமுகவுடனான கூட்டணி முறிந்து, [[விடுதலைச் சிறுத்தைகள்]], [[புதிய தமிழகம்]] ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் எந்த தொகுதிகளிலும் வெற்றிபெற வில்லை. [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001]] சட்டமன்றத் தேர்தலில் அதிமுகக் கூட்டணியில் இடம்பெற்று 23 இடங்களில் வென்றது. 2001ல் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் [[ஜி. கே. வாசன்]] தமாக தலைவரானார். 2002ல் தமாக இந்திய தேசியக் காங்கிரசுடன் இணைந்து விட்டது.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை மீண்டும் தொடங்கினார்.<ref name=".vikatan.com">{{cite web | url=http://www.vikatan.com/news/politics/45614.art | title=த.மா.கா. தலைவராக ஜி.கே.வாசன் தேர்வு! | accessdate=20 மார்ச் 2016}}</ref>
2,479

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2960598" இருந்து மீள்விக்கப்பட்டது