ரோமியோ ஜூலியட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 3:
 
'''[[வில்லியம் சேக்சுபியர்|வில்லியம் சேக்சுபியரின்]]''' ரோமியோ ஜூலியட் என்ற துன்பியல் நாடகம் 1595-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலாக அரங்கேற்றப்பட்டது. ரோமியோ ஜூலியட் நாடகம் பாலியல் எண்ணம் செறிந்த, பருவகால வயது, காதல் மற்றும் மரணம் இவற்றினாலான புகழ்பெற்ற காதல் வீரத் துன்பியல் நாடகம். ஷேக்ஸ்பியரின் மிக பிரபலமான நாடகங்களில் இதுவும் ஒன்று .
 
 
காதல்... கலை... இயற்கையோடு தன்னை இழைத்துக் கொண்ட பதின்பருவத்து வாலிபன் ரோமியோ. ரோஸலின் என்பவளை உருகிக் காதலிக்கிறான். அவள் ரோமியோவின் காதலை ஏற்காத நிலையில், எதேச்சையாக ஜூலியட்டைக் காண்கிறான். அதோடு அவன் மனம் ஜூலியட் வசமாகிவிடுகிறது. உருகி உருகிக் காதலிக்கிறான். பதின்பருவத்தில் இருக்கும் ஜூலியட்டும், உடனே ரோமியோவிடம் காதல் கொள்கிறாள். ஆனால், இருவரின் குடும்பங்களுக்கு இடையிலும் பரம்பரைப் பகை கனன்று கொண்டிருக்கிறது. காதலிக்க ஆரம்பித்த பிறகுதான் நாம் பரம எதிரியின் முகாமில் மனதைப் பறி கொடுத்திருக்கிறோம் என்ற விஷயம் இருவருக்கும் தெரிய வருகிறது.
 
ஆனால், அதற்காக தங்களின் காதலைப் பலியிட முடியாது என்ற நிலைக்கு சென்று விடுகின்றனர். தங்களின் இக்கட்டான நிலை பற்றி, பாதிரியார் லாரன்ஸிடம் முறையிடுகின்றனர். அவர் தற்காலிகமாக ரோமியோவுக்கும் ஜூலியட்டுக்கும் ரகசியத் திருமணம் நடத்தி வைக்கிறார்.
 
இந்த நிலையில் ஜூலியட்டை ஒரு தலையாகக் காதலிக்கும், அவளுடைய உறவுக்காரன் பாரிஸ், தன்னுடைய விருப்பத்தை ஜூலியட்டின் பெற்றோர்களிடம் தெரிவிக்கிறான். அவர்களும் அவனையே ஜூலியட்டிற்கு மணமகனாக முடிவு செய்கின்றனர். அதே நேரத்தில், எப்போதும் ரோமியோவையும், அவனுடைய நண்பர்களையும் அறவே வெறுக்கும் ஜூலியட்டின் மற்றொரு உறவினன் டைபால்ட், ரோமியோவின் நண்பன் ஒருவனை தெருச் சண்டையில் குத்திக் கொன்று விடுகிறான். தான் மிகவும் நேசிக்கும் நண்பனை, கொன்றுவிட்ட டைபால்டைத் தேடிப்போய் ரோமியோ கொலை செய்கிறான். இந்தக் கொலைகள் பற்றிக் கேள்விப்பட்ட அந்த நாட்டின் ராணி, ‘ரோமியோ உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்' என்று உத்தரவிடுகிறார்.
 
ஜூலியட்டின் நிலை இரு தலைக் கொள்ளி எறும்பாகிறது. நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட காதலன்... வேறொருவனுடன் தனக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள திருமணம்... என்று தீராத மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். இதையடுத்து ஆறுதல் தேடி, பாதிரியார் லாரன்ஸைச் சந்தித்து முறையிடுகிறாள். ரோமியோ-ஜூலியட் இருவருக்காகவும் வருத்தப்படும் பாதிரியார் லாரன்ஸ், அவர்களின் பிரச்னையை தீர்த்து வைக்க ஒரு யோசனையை முன் வைக்கிறார். அதன்படி, ஜூலியட்டிடம் ஒரு மயக்க மருந்தைக் கொடுத்து, 'இன்று இரவு இதை நீ அருந்திவிடு. அருந்தியதும் நீ மயக்கமடைந்து விடுவாய். அந்த மயக்கம் தெளிய 48 மணி நேரம் பிடிக்கும். ஆனால், நீ மயக்க மருந்து அருந்தித்தான் மயங்கிக்கிடக்கிறாய் என்பது யாருக்கும் தெரியாது.
 
அவர்கள் நீ திருமணத்தில் விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்து கொண்டதாக நினைப்பார்கள். உடனே, உன்னை சவப்பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்துவிடுவார்கள். நான் அந்த நேரத்தில், ரோமியோவைத் தொடர்பு கொண்டு, உண்மையைச் சொல்லி, அவனை கல்லறைக்கு அழைத்து வருகிறேன். அங்கு சவப்பெட்டிக்குள் இருந்து உன்னை மீட்டு ரோமியோவுடன் அனுப்பி வைக்கிறேன். இந்த விஷயம் உன்னையும், என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் ' என்கிறார்.
 
ஜூலியட் அதற்குச் சம்மதிக்கிறாள். பாதிரியார் லாரன்ஸ் சொன்னபடியே, மயக்கமருந்தை அருந்தி மயங்கி விடுகிறாள். அவளுடைய பெற்றோர், அவள் இறந்து விட்டதாக எண்ணி, அவளை சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்துவிடுகின்றனர்.
 
இதற்கிடையில், இந்த விஷயங்களை எல்லாம் விளக்கமாக எழுதி, பாதிரியார் லாரன்ஸ் ரோமியோவிற்கு கடிதம் ஒன்றை கொடுத்தனுப்புகிறார். அந்தக் கடிதம் ரோமியோவைச் சேராமல் போய்விடுகிறது. ஆனால், ரோமியோவின் நண்பன் பால்தஸர் மூலம், ஜூலியட் மரணமடைந்து விட்டாள். அவளை கல்லறையில் அடக்கம் செய்துவிட்டனர் என்ற தகவல் ரோமியோவிற்கு தெரியவருகிறது. தனக்காக இறந்துவிட்ட காதலியோடு சேர்ந்து தானும் தன்னை மாய்த்துக் கொள்வதுதான் சரி என்று நினைக்கும் ரோமியோ, கொடிய விஷத்தை வாங்கிக் கொண்டு அவள் கல்லறைக்கு வருகிறான். அங்கு அந்த விஷத்தைக் குடித்து தற்கொலை செய்து கொள்கிறான்.
 
அதன்பிறகு அங்கு வரும் பாதிரியார், ரோமியோ அவசரப்பட்டு விட்டான் என்று கண்ணீர் வடிக்கிறார். அத்துடன், மயக்க மருந்து சாப்பிட்டு இறந்ததுபோல் மயங்கிக்கிடக்கும் ஜூலியட்டையாவது காப்பாற்றுவோம் என்று நினைத்து, சவப்பெட்டிக்குள் இருந்து அவளை மீட்கிறார். வெளியில் வந்து கண் திறக்கும் ஜூலியட்டின் முன், ரோமியோவின் இறந்த உடல்தான் கிடக்கிறது. அவளுக்கு நடந்தவற்றை பாதிரியார் லாரன்ஸ் எடுத்துரைக்கிறார். அதைக் கேட்ட ஜூலியட், எனக்காக தன் உயிரை மாய்த்துக் கொண்ட ரோமியோவிற்காக நானும் மரிக்கிறேன் என்று சொல்லி, ரோமியோவின் குறுவாளை எடுத்து தன்னைத்தானே குத்திக் கொண்டு மரிக்கிறாள்.
 
நடந்தவை அனைத்தையும் பாதிரியார் மூலமும் ரோமியோவின் நண்பன் பல்தஸர் மூலமும் நாட்டின் அரசிக்கும், ரோமியோ-ஜூலியட்டின் பெற்றோர்களுக்கும் தெரியவருகிறது. தங்களின் வறட்டுக் கௌரவம் இரண்டு உயிர்களை காவு வாங்கிவிட்டதை எண்ணி மனம் வருந்தும் பெற்றோர்கள் அதோடு திருந்துகிறார்கள். நாட்டின் ராணி, ரோமியோ-ஜூலியட் காதலர்களுக்கு சிலை வடிக்கிறாள்
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரோமியோ_ஜூலியட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது