இந்துஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
வரிசை 1:
[[File:1864 Johnson's Map of India (Hindostan or British India) - Geographicus - India-j-64.jpg|thumb|300px|ஜான்சனின் ''இந்துஸ்தான் அல்லது பிரித்தானிய இந்தியா'' வரைபடம், ஆண்டு 1864]]
'''இந்துஸ்தான்'''({{audio|Hindustan pronunciation1.ogg|உச்சரிப்பு}}) மற்றும் அதன் சுருங்கிய வடிவமான '''இந்த்'''<ref name="Kapur2019">{{cite book |last1=Kapur |first1=Anu |title=Mapping Place Names of India |date=2019 |publisher=Taylor & Francis |isbn=978-0-429-61421-7 |language=English}}</ref> ஆகிய வார்த்தைகள் இந்தியாவை குறிக்க பயன்படுத்தப்படும் பாரசீக பெயர்களாகும். இந்திய பிரிவினைக்கு பிறகு இந்திய குடியரசு பற்றி குறிப்பிட பயன்படுத்தப்படும் வரலாற்று ரீதியான பெயராக இது தொடர்கிறது.<ref>{{citation |chapter=Sindh: An Introduction |title=Shaikh Ayaz International Conference – Language & Literature |chapter-url=http://www.usindh.edu.pk/shaikh_ayaz_conf_07/sindh.html |archive-url=https://web.archive.org/web/20071020050542/http://www.usindh.edu.pk/shaikh_ayaz_conf_07/sindh.html |archive-date=20 October 2007}}</ref><ref name = Singh2009>{{cite book |page=276 |author=Sarina Singh |title=Lonely Planet India |publisher=Lonely Planet |year=2009 |edition=13, illustrated |isbn=9781741791518 |url=https://books.google.com/?id=vK88ktao7pIC&pg=PA276&dq=hindustan+zindabad#v=onepage&q=hindustan%20zindabad&f=false}}</ref><ref name = Everaer2010>{{cite book |author=Christine Everaer |title=Tracing the Boundaries Between Hindi and Urdu: Lost and Added in Translation Between 20th Century Short Stories |publisher=BRILL |year=2010 |edition=annotated |isbn=9789004177314 |page=82 |url=https://books.google.com/?id=LqZ-6QRKc7wC&pg=PA82&dq=hindustan+zindabad#v=onepage&q=hindustan%20zindabad&f=false}}</ref> இந்துஸ்தான் என்ற பெயரின் மற்றொரு பொருள் வட இந்தியாவின் இந்தோ-கங்கை சமவெளியை புவியியல் ரீதியாக குறிக்க பயன்படுத்தப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.thefreedictionary.com/Hindustan |title=Hindustan: Definition |publisher=Thefreedictionary.com |date= |accessdate=15 May 2012}}</ref>
 
==சொற்பிறப்பியல்==
இந்துஸ்தான் என்ற சொல் [[பாரசீக மொழி|பாரசீகச்]] சொல்லான ''இந்து''விலிருந்து பெறப்பட்டதாகும். இச்சொல்லும் சமசுகிருத சொல்லான ''சிந்து''வும் ஒரே பொருள் உடையவை ஆகும்.{{sfnp|Sharma, On Hindu, Hindustan, Hinduism and Hindutva|2002|p=3}} [[அஸ்கோ பார்ப்போலா]]வின் கூற்றுப்படி முன் ஈரானிய சத்தமான ''*சி'' என்பது ''இ'' என்று கி. மு. 850 முதல் 600 ஆம் ஆண்டுகளில் மாற்றமடைந்தது.{{sfnp|Parpola, The Roots of Hinduism|2015|loc=Chapter 9}} இவ்வாறாக [[இருக்கு வேதம்|இருக்கு வேத]] கால ''சப்த சிந்தவா'' (ஏழு ஆறுகளின் நிலம்) [[அவெத்தா]]வில் ''அப்த இந்து'' என்று மாறியது. இது [[அகுரா மஸ்தா]]வால் உருவாக்கப்பட்ட "பதினைந்தாவது இராச்சியம்" எனக் கூறப்பட்டது. 'அதிக வெப்பம்' உடைய நிலம் என்று கூறப்பட்டது.{{sfnp|Sharma, On Hindu, Hindustan, Hinduism and Hindutva|2002|p=2}} கி. மு. 515 ஆம் ஆண்டு [[முதலாம் டேரியஸ்]] ''சிந்து'' பகுதி (தற்கால [[சிந்து மாகாணம்]]) உள்ளிட்ட சிந்து சமவெளியை தனது அரசில் இணைத்துக்கொண்டார். பாரசீக மொழியில் இந்த இடம் இந்து என்று அழைக்கப்பட்டது.{{sfnp|Parpola, The Roots of Hinduism|2015|loc=Chapter 1}} [[முதலாம் செர்கஸ்|முதலாம் செர்கசின்]] காலத்தில் சிந்து ஆற்றுக்கு கிழக்கில் இருந்த அனைத்து நிலப்பகுதிகளையும் குறிக்க "இந்து" என்ற பதம் பயன்படுத்தப்பட்டது.{{sfnp|Sharma, On Hindu, Hindustan, Hinduism and Hindutva|2002|p=3}}
 
நடு பாரசீக மொழியில், அநேகமாக கி. பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து பின்னொட்டான -''ஸ்தான்'' என்ற சொல் இணைக்கப்பட்டது. இதற்கு ஒரு நாடு அல்லது பகுதி என்று பொருள். இவ்வாறாக தற்போதைய சொல்லான ''இந்துஸ்தான்'' உருவானது.{{sfnp|Habib, Hindi/Hindwi in Medieval Times|2011|p=105}} {{circa}} கி. பி. 262 ஆண்டின் போது முதலாம் சாபுரின் நக்‌சு-இ-ருசுதம் கல்வெட்டில் சிந்து என்பது ''இந்துஸ்தான்'' என்று குறிக்கப்பட்டது.{{sfnp|Mukherjee, The Foreign Names of the Indian Subcontinent|1989|p=46}}{{sfnp|Ray & Chattopadhyaya, A Sourcebook of Indian Civilization|2000|p=553}}
 
வரலாற்றாளர் பி. என். முகர்ஜியின் கூற்றுப்படி ஒரு காலத்தில் சிந்து ஆற்றின் கீழ் வடி நிலத்தை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்லான ''இந்துஸ்தான்'' படிப்படியாக விரிவடைந்து "கிட்டத்தட்ட அனைத்து [[இந்தியத் துணைக்கண்டம்|இந்திய துணைக் கண்டத்தையும்]]" குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. கிரேக்க-உரோமானியப் பெயரான "இந்தியா" மற்றும் சீனப் பெயரான ''சென்டு'' ஆகியவையும் இதேபோன்ற ஒத்த பரிணாமத்தை பின்பற்றின.{{sfnp|Mukherjee, The Foreign Names of the Indian Subcontinent|1989|p=46}}{{sfnp|Ray & Chattopadhyaya, A Sourcebook of Indian Civilization|2000|p=555}}
 
பாரசீகச் சொல்லான ''இந்து''விலிருந்து பெறப்பட்ட அரேபியப் பதமான ''இந்த்'' பலுசிஸ்தானில் மக்கரான் கடற்கரையிலிருந்து இந்தோனேசிய தீவுக்கூட்டம் வரை உள்ள இந்தியமயமாக்கப்பட்ட பகுதிகளைக் குறிக்க அரேபியர்களால் பயன்படுத்தப்பட்டது.<ref name="Wink2002"/> ஆனால் இறுதியாக அச்சொல்லும் இந்தியத் துணைக் கண்டத்தை அடையாளப்படுத்தக்கூடிய சொல்லாக மாறியது.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/இந்துஸ்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது