தவளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category நிலநீர் வாழிகள்
*விரிவாக்கம்*
 
வரிசை 19:
[[List of Anuran families]]}}
 
'''தவளைகள்''' [[நிலநீர் வாழிகள்]] [[வகுப்பு (உயிரியல்)|வகுப்பைச்]] சேர்ந்த ஒரு [[வரிசை (உயிரியல்)|வரிசையாகும்]]. இவ்வரிசை [[அறிவியல் வகைப்பாடு|அறிவியல் வகைப்பாட்டில்]] "வாலில்லா" என்று பொருள்படும் அனுரா (''Anura'') என்றழைக்கப்படுகிறது. முழுவளர்ச்சி அடந்த தவளைகளுக்கு நீண்ட பின்னங்கால்களும், திரண்டு உருண்ட உடலும், விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள [[கொய்யடி]] என்னும் பாதங்களும், புறத்தே பிதுங்கி இருக்கும் [[கண்]] முழிகளும், கொண்டுகொண்ட வாலில்லா ஓர் [[இருவாழ்விகள்|இருவாழ்வி]] விலங்கு. சிறு குட்டைகளிலும், குளங்களிலும் காணப்படுவன. தவளைகளில் ஏறத்தாழ 5000 வெவ்வேறு உள் இனங்கள் உள்ளன. [[தென் அமெரிக்கா]]வைச் சேர்ந்த சில தவளைகள் மிகுந்த நஞ்சு உடையதாகவும் உள்ளன. சில வகைத் தவளைகள் கூடுகட்டும் திறன் பெற்றுள்ளன. அண்மையில் தென்னிந்தியாவில் கூடு கட்டும் அரியவகைத் தவளை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது<ref>http://news.bbc.co.uk/2/hi/south_asia/8233923.stm</ref>.
[[படிமம்:Dendrobates pumilio.jpg|thumb|left|250px|கண்களுக்கு அருகே நஞ்சுச் சுரபிகள் உள்ள நச்சுத்தவளை. [[தென் அமெரிக்கா]]வில் வாழ்கின்றது]]
 
நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்ட தவளைகளை ''மழைக்காலத்தின் பாடகர்கள்'' என்று அழைக்கிறார்கள்.<ref>[http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8483023.ece|பசுமை இலக்கியம்: தொலைந்துபோன மழைப் பாடகர்கள்] தி இந்து தமிழ் 16 ஏப்ரல் 2016</ref>
தவளைகள் வெப்ப வலயப் பகுதி முதல் ஆர்க்டிக்கின் கீழ்ப்பகுதி வரையான உலகின் பல்வேறு சூழற்பகுதிகளிலும் உள்ளன. எனினும் இவற்றின் பல்வேறு இனங்கள் மழைக்காடுகளிலேயே மிகுந்து உள்ளன. 6,300 க்கும் மேலான தவளை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இருவாழ்வி இனங்களின் மொத்த எண்ணிக்கையில் 88% ஆகும்.
 
இவை சூழலோடு ஒன்றித் தெரியும் பழுப்பு, பச்சை வண்ணங்களிலும் எடுப்பான மஞ்சள், சிவப்பு வண்ணங்களிலும் உள்ளன. வளர்ந்த தவளைகள் நன்னீரிலும் வறண்ட நிலத்திலும் வாழ்கிறது. எனினும் சில தவளையினங்கள் மரத்திலும் தரைக்கடியிலும் வாழத் தகவமைத்துக் கொண்டுள்ளன.
 
தவளைகள் நீரில் முட்டையிடுகின்றன. வளர்ந்த பெண் தவளையானது ஒரு சமயத்தில் இரண்டில் இருந்து 50,000 முட்டை வரை இடும். <ref>{{cite web |title=LiveScince |url=https://www.livescience.com/50692-frog-facts.html |website=www.livescience.com |accessdate=29 April 2020}}</ref>முட்டை பொரிந்து தலைப்பிரட்டை உருவாகிறது. பின்னர் அது வளர்ந்து தவளையாக உருப்பெறுகிறது. வளர்ந்த தவளைகள் பொதுவாக ஊனுண்ணிகளாகும். எனினும் தாவரங்களையும் உண்ணும் சில அனைத்துண்ணித் தவளைகளும் உள்ளன. தவளைகள் பலவகையான ஒலிகளை, குறிப்பாக இனப்பெருக்க காலத்தில் எழுப்புகின்றன.
 
== காட்சியகம் ==
<gallery>
"https://ta.wikipedia.org/wiki/தவளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது