இரா. கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
தொடர்ந்து, சோழர் வெளியிட்ட பல நாணயங்களை கண்டுபிடித்தார். சங்க காலத்தில் ஆண்ட சேர மன்னர் மாக்கோதை வெளியிட்ட நாணயத்தையும் கண்டுபிடித்துள்ளார்.
கிரேக்க நாட்டவர், தமிழகத்துடன் செய்த வாணிபத்தை நிரூபிக்கும் வகையில், நாணயங்களை கண்டுபிடித்துள்ளார். திரேஸ், தெசலி, கீரிட் பகுதியில் உருவாக்கிய நாணயங்களை, தமிழகத்தில் கண்டு எடுத்து ஆராய்ந்து, தமிழ் பகுதியில், கிரேக்கர்களின் வாணிபத் தொடர்பையும் அதன் காலத்தையும் நிரூபித்துள்ளார்.
 
== விருதுகள் ==
நாணயவியல், இதழியல், எழுத்தியல் என, பல துறைகள், ஆர்கே.,யின் உழைப்பால், செழுமையடைந்துள்ளன. அவரது அயராத உழைப்பைப் பாராட்டி, இந்திய அரசு, தமிழக அரசு, பல்கலைக்கழகங்கள், வரலாற்று ஆய்வு மையங்கள், அயல்நாட்டு ஆய்வு அமைப்புகள் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன.
சங்க காலத்தில் ஆட்சி செய்த சோழ மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை ஆராய்ந்து, ‘சங்ககாலச் சோழர் நாணயங்கள்’ என்ற தலைப்பில் ஒரு நுாலை, ஆர்கே., எழுதினார். இந்த உழைப்பைப் போற்றும் வகையில், தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை, 1988ல் சிறந்த நுாலாகத் தேர்வு செய்து பரிசு வழங்கிப் பாராட்டியது.
சங்க காலத்தில் வாழ்ந்த, பாண்டிய மன்னர் பெருவெழுதி, நாணயங்கள் வெளியிட்டுள்ளதை, ஆர்கே., கண்டுபிடித்தார். அந்த நாணயங்களை ஆராய்ந்து, ‘பாண்டியர் பெருவழுதி நாணயங்கள்’ என்ற நுாலை வெளியிட்டார். தமிழர் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துக்காட்டிய புத்தகம் இது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், இதைச் சிறந்த வரலாற்று ஆய்வு நுாலாகத் தேர்வு செய்து, 1988ல் பரிசு வழங்கிக் கவுரவித்தது.
தமிழகத்தில், சிறந்த வரலாற்று ஆய்வு அறிஞராக, இரா.கிருஷ்ணமூர்த்தியை, தஞ்சாவூர், கே.என்.ஜி. கலைக்கல்லுாரி, வரலாற்றுத்துறை தேர்வுசெய்துள்ளது. இதற்காக, 1991ல் கேடயம் வழங்கிக் கவுரவித்தது.
வாரணாசியில் உள்ள இந்திய நாணயவியல் சங்கம், ஆண்டுக் கருத்தரங்கை, கர்நாடக மாநிலம், தர்மசாலாவில், 1991 டிசம்பரில் நடத்தியது. அந்தக் கருத்தரங்கில், ஆர்கே.,க்கு, ‘சி.எச்.பிடுல்ப்’ விருது வழங்கிக் கவுரவித்தது.
இந்திய நாணயவியல் சங்கம், கேரள மாநிலம், எர்ணாகுளத்தில், 1995 ஆகஸ்டில், ஒரு கருத்தரங்கு நடத்தியது. அதில், ஆர்கே.,க்கு, ‘டி.தேசிகாச்சாரி’ விருது வழங்கிக் கவுரவித்தது.
ஐரோப்பா கண்டம், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற ராயல் நாணயவியல் சங்கம், 1997ல், ஆர்கே.,க்கு, கவுரவ உறுப்பினர் (Fellow of Royal Numismatic Society) என்ற உயரிய தகுதி தந்து கவுரவித்துள்ளது.
லண்டன் ராயல் நாணயவியல் சங்கம் வழங்கிய கவுரவத்தையடுத்து, கொங்கு நாணயவியல் ஆய்வு மையம், கொங்கு ஆய்வு மையம், கலைமகள் கா.மீனாட்சிசுந்தரனார் அருங்காட்சியகம் ஆகிய அமைப்புகள் இணைந்து, 1998 ஜூலை 20ல், ஈரோட்டில், ஆர்கே.,க்கு பாராட்டு விழா நடத்திக் கவுரவித்தன; நினைவுப் பரிசுகளும் வழங்கின.
லண்டன் ராயல் நாணயவியல் சங்கம் கவுரவ உறுப்பினர் பதவி கொடுத்ததை அடுத்து, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 1998ல் பாராட்டு விழா நடத்திக் கவுரவித்தது. சென்னை மாநிலக் கல்லுாரி பழைய மாணவர் சங்கமும் பாராட்டு விழா நடத்திக் கவுரவித்தது.
திருக்கோவிலுார் பண்பாட்டுக் கழகம், 1998 மே மாதம், ‘கபிலவாணர் விருது’ வழங்கி, முனைவர், இரா.கிருஷ்ணமூர்த்தியைக் கவுரவித்தது.
திருச்சிராப்பள்ளி நாணயவியல் ஆய்வுக்கழகம், ஆர்கே.,க்கு, 1999 பிப்ரவரியில், ‘நாணயவியல் ஆய்வுச்செம்மல்’ என்ற பட்டம் வழங்கிக் கவுரவித்தது.
ஆர்கே.,யின் சமூகத்தொண்டு மற்றும் இதழியல் தொண்டுகளைப் பாராட்டி, 2000 ஏப்ரலில், ‘மெட்ராஸ் தெலுங்கு அகாடமி’ என்ற அமைப்பு, ‘யுகாதி புரஸ்கார் –2000’ என்ற விருது வழங்கிக் கவுரவித்தது.
ஸ்ரீரங்கத்தில் உள்ள, ‘செண்பகம் தமிழ் அரங்கு’ என்ற அமைப்பு, 2001 ஜனவரியில், ஆர்கே.,க்கு, ‘நாணயவியல் பேரறிஞர்’ என்ற கவுரவம் வழங்கிச் சிறப்பித்தது.
அறிஞர்கள், அமைப்புகள் மூலம் அளித்த கவுரவம் ஒரு புறம். இந்திய அரசும், முனைவர், இரா.கிருஷ்ணமூர்த்தியின் ஆய்வுப் பணிகளைப் பாராட்டி உயர்ந்த பீடத்தில் அமர்த்தியுள்ளது.
‘செம்மொழி’ என்ற தகுதியைப் பெற, தமிழ் மொழிக்கு உரிய சேவை ஆற்றியவர்கள் பலர். அதில் முக்கியமானவர், முனைவர், இரா.கிருஷ்ணமூர்த்தி. அவரது சேவையைப் பாராட்டியுள்ள இந்திய அரசு, ஜனாதிபதி விருதுக்குத் தகுதியுள்ளவராக அறிவித்தது. இந்தத் தகுதியை உறுதிப்படுத்தும் வகையில், முனைவர், இரா.கிருஷ்ணமூர்த்திக்கு, 2012 – 2013ம் ஆண்டுக்கான, ‘தொல்காப்பியர் விருது’ வழங்கும் ஆணையை வெளியிட்டது.
பழமையான தமிழ் மொழியின் முதன்மை இலக்கண ஆசிரியர், தொல்காப்பியர் பெயரிலான இந்த விருதை, முனைவர், இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கி கவுரவிக்கும் விழா, 2015ல் புதுடில்லியில் உள்ள இந்திய ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. பல்வேறு துறை அறிஞர்கள் நிறைந்திருந்த அவையில், அப்போதைய ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, விருதையும், பாராட்டுப் பத்திரத்தையும், முனைவர், இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கிக் கவுரவித்தார். இந்தியாவின் உயரிய கவுரவமாக அது போற்றப்படுகிறது.
கணினித் தமிழுக்கு, முனைவர், இரா.கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய பணிகளைப் பாராட்டி, ‘கணித்தமிழ் சங்கம்’ அக்டோபர், 2005ல், ‘கணித்தமிழ் விருது’ வழங்கிக் கவுரவித்துப் பாராட்டியது.
தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் வெள்ளிவிழா ஆய்வரங்கு, 2018 அக்டோபர், 8ல் நடந்தது. அதில், ஆர்கே.,யின் வரலாற்று ஆய்வுப்பணிகளைப் பாராட்டி கவுரவிக்கும் விதமாக, ‘தமிழ்நாடு வரலாற்றியல் அறிஞர்’ என்ற பட்டத்தை, தமிழக வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் குழு வழங்கியது.
வாரணாசியில் உள்ள இந்திய நாணயவியல் கழகம், 102ம் ஆண்டு மாநாட்டை, கோவாவில் நடத்தியது. அந்த மாநாட்டில், முனைவர், இரா.கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் பங்களிப்புகளைப் பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர் செய்துள்ள ஆய்வுகளைச் சிறப்பித்தும், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்க முடிவு செய்தது. இந்த விருது வழங்கும் வைபவம், தென்னிந்திய நாணயவியல் சங்கம், சென்னையில் நடத்திய, 29ம் ஆண்டு மாநாட்டின்போது நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுனர், பன்வாரிலால் புரோகித், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, முனைவர், இரா.கிருஷ்ணமூர்த்திக்கு, ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கிக் கவுரவித்தார். இந்த நிகழ்ச்சி, 2019 ஜனவரி, 6ம் தேதி நடந்தது.
மும்பை பல்கலைக் கழக வரலாற்று துறை, முதுகலை பாடத்திட்டத்தை, 2013ல் மாற்றியமைத்தது. அப்போது, முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய, ‘சங்க கால தமிழ் நாணயங்கள்’ என்ற ஆங்கில நுாலை பார்வை நுாலாக சேர்த்து கவுரவித்துள்ளது.
 
== ஆய்வு நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இரா._கிருஷ்ணமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது