இரா. கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
 
தந்தை, [[தினமலர்]] நிறுவனர், டி.வி.ராமசுப்பையர். தாயார் கிருஷ்ணம்மாள். இந்தத் தம்பதிக்கு, இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி. அப்போதைய [[திருவிதாங்கூர்]] சமஸ்தானத்தில் நாகர்கோவில் அருகே, வடிவீஸ்வரம் கிராமத்தில் ஜனவரி 18, 1933ல் பிறந்தார். நாகர்கோவில் [[சேது லெக்குமிபாய் பள்ளி]] என்ற [[எஸ்.எல்.பி.பள்ளி]]யிலும், [[ஸ்காட் கிறிஸ்தவ கல்லுாரி]]யிலும் கற்றார். உயர் கல்வியை, காரைக்குடி மற்றும் [[சென்னை பல்கலைக்கழகம்]] ஆகியவற்றில் பயி்ன்றார். பின் தினமலர் நாளிதழில் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.
 
== பத்திரிகை ஆசிரியர் ==
பத்திரிகை ஆசிரியர் பணியை, கல்வித் தகுதியும், வாழ்வு அனுபவமும் நுட்பமாக்கியது.
வறுமை, சீரற்ற வளர்ச்சி, சமச்சீரற்ற வாய்ப்பு என, சமூகத்தின் பல அம்சங்களை மனதில் கொண்டு, இதழ் ஆசிரியர் என்ற பணியை நிறைவேற்றிவந்தார். அன்றாட செயற்பாடு, இவற்றை எல்லாம் தொட்டுச் செல்லும். பேச்சில், கவனிப்பில், நிகழ்வுகளில் சமூக நிலையை கண்டு தெளிவார். அதற்கு ஏற்ப செய்திகளைத் தயாரிக்க உணர்த்துவார்.
ஆசிரியர் குழு விவாதங்களில், ‘ஒரு சொல், பல்லாயிரம் உணர்த்தல்’ என்ற அடிப்படையில் கருத்துக்களைப் பகிர்வார். தவறு என்று அறிந்தால், அறிவுரைத்து திருத்துவார். பத்திரிகை பணி அவரது பன்முகத்திறனாக வெளிப்பட்டது. தகுதியுள்ளவர்களை இனம் கண்டு, ஆசிரியர் குழு பணிகளில் அமர்த்தி, தினமலர் நாளிதழ் செய்திப்பிரிவை சிறப்பாக நிர்வகித்தார்.
 
== தமிழ் எழுத்து சீர்மை ==
"https://ta.wikipedia.org/wiki/இரா._கிருஷ்ணமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது