சீர்பாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
*வீரமுனையில் காலதேவன், காங்கேயன், முழவன், பொட்டப்பழச்சி, சிந்தன், பாட்டுவாழி, வெள்ளாகி, நரையாகி, படையன், பரதேசி என பத்து குடிகள் உள்ளன.
==திருமணம்==
ஆண் ஒரு குடியிலும் பெண் வேறு குடியிலுமாக அமைந்த சம்பந்தமே இங்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட திருமண சம்பந்தமாகும். சகோதரனின் மகனோ அல்லது மகளோ சகோதரியின் மகளையோ அல்லது மகனையோ திருமணம் செய்வதையே ஏற்றுக் கொள்ளப்பட்ட சமூகக் கொள்கையாக அமைந்துவந்தது. ஆனால் இன்று பெற்றோர் உடன்பிறந்தவர்களை திருமணம் செய்வதால் அங்கவீனமான குழந்தைகள் பிறப்பதாக கருதி, இம்முறை படித்தவர்களிடம் குறைந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு வேறுகுலத்தவரிடையே சென்று திருமணம் புரிவதைவிட இக்குலத்தில்திருமணம் செய்வது சிறப்பானதாக கருதுகின்றனர். சீர்பாத குல மக்களின் திருமண சம்பந்தமானது பின்வருமாறு அமைந்து விடுகின்றது
1. பெற்றேர்ர் சாணைக்குறியிடுவதன் மூலம் சாணைத்திருமணம்
2. பெற்றோர் தேர்ந்தெடுப்பதன் மூலம் பேச்சுத்திருமணம்
3. ஆணும் பெண்னும் தாங்களாகவே விரும்புவதன் மூலம் காதல் திருமணம் என்பனவாகும்.
 
குழந்தையை பிரசவிக்கும் வேளையில் பிறந்த குழந்தையை கழுவி பின்னர் உடனிருந்தும் உதவிபுரியும் மச்சாள் இந்தப்பிள்ளைக்கு எனது இன்ன மகனே மணமகனாவான் எனக் கூறி பிள்ளையின் வயிற்றின் மீது மடித்த சீலைத் துண்டொன்றை போடுவாள் குழந்தையின் உபயோகத்திற்கு பயன்படும் துணிகளை சாணை என்னும் பெயரால் வழங்குவது வழக்கு. அவ்வகையில் குழந்தையின் மீது போடப்பெற்ற சீலையும் சாணையாகின்றது இதுவே சாணைக்குறியென்று அழைக்கப்பட்டது. இவ்வாறு சாணைக்குறி மூலம் தீர்மானிக்கப்பட்ட குழந்தைகள் இருவரும் வளர்ந்து உரிய பருவம் அடைந்நததும் இவர்களுக்கு திருமணம் நடாத்தி வைக்கப்படுகின்றது. இவ்வாறு சாணைக்குறியிடுவதன் மூலம் ஏற்படும் திருமண வாழ்க்கை தற்காலத்தில் மறைந்து செல்வதை காணக்கூடியதாகவும் உள்ளது. ஆணும் பெண்னும் ஒருவரையொருவர் கருத்தொருமித்து ஆதரவு பெற்று திருமணம் செய்வர் இத்திருமணம் பெற்றார் விருப்பத்துடனும் அன்றேல் பெற்றார் விருப்பிமின்றியும் நடைபெறலாம்.
 
தற்காலத்தில் சோதிடப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதே பெருவழக்காக உள்ளது திருமணப்பொருத்தம் பார்த்தல் என்பது ஆணினதும் பெண்ணினதும் பிறந்த சோதிடக் குறிப்புகளைக் கொண்டு சோதிடர் நிபுணர்த்துவம் மூலமாக பொருத்தம் பார்த்தல். அப்பொருத்தங்கள் பதினான்காகும். இருந்தாலும் பெரும்பான்மை பத்துப் பொருத்தங்களே உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இவைகளும் கிரகப் பொருத்தத்துடன் நட்சத்திரப்பொருத்தம், கணப்பொருத்தம், இரட்சிப் பொருத்தம், யோனிப் பொருத்தம், இராசிப் பொருத்தம் ஆகிய ஐந்தும் முக்கியமானதாகும். இவை ஐந்திலும் யோனிப் பொருத்தம் இரட்சிப்பொருத்தத்துடன் சேர்ந்து பொருந்த வேண்டும் இவ்வாறு பார்க்கப்பட்ட பொருத்தம் பெரும் பான்மை பொருந்துமாயின் மட்டுமே திருமணப் பேச்சுவார்த்தை தொடரப்படும்.
 
இங்கு ஒரே குடிக்குள் திருமணம் நடைபெறாது. இங்கு ஒரே குடித்திருமணத்தை தகாப் புணர்ச்சியாக அடையாளப்படுத்தப்படுகின்றது. சீர்பாத குலக்குடிகள் எவை எவை முறையான குடிகள் என ஒருவரையறை உண்டு. அதில் சிந்தாத்திரன் குடியினர் பாட்டுவாழி குடி, முடவன் குடி இரண்டிற்கும் மண உறவு சம்மந்தக் குடிகளாகும். இதனால் சிந்தாத்திரன் குடிக்கு இவையிரண்டும் “மைத்துனன் குடி” என்றழைக்கப்படுவது மரபாகும். இவ் மரபு அவர்களது வாழ்கையில் பேணப்பட்டு இக்குடிகள் தங்களுக்குள் திருமணம் செய்கின்றமை பெருமைக்குரிய விடயமாகக் கொள்ளப்படுகின்றது.
 
சிந்தாத்திரன், பாட்டுவாழி இரண்டினதும் திருமணசம்மந்தம் பற்றிய வாய்மொழி மரபிலான வரலாற்றுக்கதை ஒன்று உண்டு. சிந்தன்வழி வந்தோன் - கோரைக்கிளப்பில் சிவக் கொழுந்து என்னும் பெண்ணைக் கொண்டுவந்து திருமணம் செய்த போது சிவக்கொழுந்துவின் அண்ணன் “தங்கையின் வழித்தோன்றல்கள் சிந்தாத்திரன் குடி வழியினரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறினானாம்” அது மரபு வழி பேணப்பட்டு வந்தமையினாலே பாட்டுவாழி குடி சிந்தாத்திரன் குடிக்கு மைத்துனன் குடியாகின்றன. இதனைப் போல முடவன் குடிப்பெண் ஆரம்பத்தில் சிந்தாத்திரன் குடிப் பெண்ணைத்திருமணம் செய்திருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. இக் குடிகளைப் போன்று செம்பகநாச்சி குடிகளும் அதிகமாக ஊசாடி குடி வழியினரை திருமண உறவு கொள்ளும் குடியினராக உள்ளனர். இதனைத்தவிர ஒரேகுடிக்குள் திருமணம் செய்யாது எல்லோரும் எல்லாக் குடிவழியிலும் திருமணம் செய்கின்றனர். இங்கு பொருளாதார நிலையே திருமணத்தில் செல்வாக்கு செலுத்துகின்றது.
 
சீர்பபாத சமூகத்தினர் வேறு சமூகத்தவருடன் திருமணம் செய்தல் கல்வி கற்ற அரசாங்க தொழில் புரிபவர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றன. இங்கு சீர்பாத குலத்தில் படித்து தொழில் பெற்ற இளைஞர்கள் தங்கள் எதிர்கால வாழ்கையில் பெருளாதாரமும், நவீனத்துவம் இவை இரண்டையும் அடிப்படைக் காரணங்களாகக் கொண்டு வேறு சமூகத்தில் திருமணபந்தத்தில் இணைகின்றனர். புறத்திருமணமோ, அகத்திருமணமோ இங்கு சீதனம் என்பது முக்கியமாக உள்ளது. அதில் கல்வி கற்று தொழில் புரிபவரிடம் அதிகம் எனலாம். இங்கு தாய்வழி உரிமை பேணப்படுவதால் பெண்வீட்டாரே திருமணமான குடும்பத்திற்கு எதிர்கால வாழ்வை வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுப்பர் அதனால் பிள்ளைக்கு வீடு, வயல், மற்றும் வீட்டுப் பொருட்கள் என்பன அவ் வீட்டின் பொருளாதார வசதிக்கு ஏற்ப பங்கிட்டுக் கொடுப்பர்.
 
==சீர்பாதகுல செப்பேடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சீர்பாதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது