இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி கக்கோரி இரயில் கொள்ளை - article blue link added in orgainsations's first known activity section
வரிசை 30:
==தொடக்ககால செயற்பாடுகள்==
 
1924லிருந்து 1925 வரை [[பகத் சிங்]], சந்திரசேகர் ஆசாத், சுக்தேவ், ராம் பிரசாத் பிஸ்மில் போன்றவர்களின் சேர்வால் இ.கு.அ உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமானது. வெளியுலகிற்குத் தெரிந்த இதன் முதல் நடவடிக்கை [[கக்கோரி இரயில் கொள்ளை|ககோரி ரயில் கொள்ளை]]. ஆகஸ்ட் 9, 1925ல் இந்த அமைப்பைச் சேர்ந்த ஒரு கூட்டம் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடித்தது. ஆஷ்ஃப்க்குல்லா கான், ராம்பிரசாத் பிஸ்மில், ரோஷன் சிங், ராஜேந்திர லகிரி ஆகியோர் காகோரி சதி வழக்கில் தூக்கிலிடப்பட்டனர். சன்யால் மற்றும் ஜோகேஷ் சந்திர சட்டர்ஜிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ககோரி வழக்கின் முடிவினால் இ.கு.அ வின் தலைவர்களின் எண்ணிக்கைப் பெரிதும் குறைந்து அதன் நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. சதிகாரர்களில் ஆசாத் மற்றும் குந்தன் லால் குப்தா மட்டுமே தப்பினர். இக்காலகட்டத்தில் இ.கு.அ [[கான்பூர்]], [[லாகூர்]] மற்றும் [[வங்காளம்|வங்காளத்தைத்]] தலைமையிடமாகக் கொண்ட கோஷ்டிகளாகப் பிரிந்தது. 1927ல் ஜதிந்திரநாத் சன்யால், (சச்சிந்திரநாத்தின் சகோதரர்) ஃபனீந்திரநாத் கோஷ், வீரேந்திரநாத் பட்டாச்சார்ஜி போன்ற புதிய புரட்சியாளர்கள் தீவிர உறுப்பினர்களாயிருந்தனர். 1928ல் [[காசி]]யில் நடந்த ராவ் பகதூர் ஜேஎன் பானர்ஜி கொலை முயற்சி நிகழ்ச்சியின் பின்னணியில் இருந்தவர் கோஷ். தியோகார் சதி வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் வீரேந்திரநாத் பட்டாச்சார்ஜி.
 
==இந்துஸ்தான் சோசியலிசக் குடியரசு அமைப்பு==