உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 628:
 
:{{ping|Perichandra}} முக்கியப்பங்கு - முக்கியப் பங்கு எது சரி? கட்டுரையில் ஒன்று இங்கு ஒன்றாக எழுதுகிறீர்கள். இரண்டு முறையும் சரியா?--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 05:04, 10 மே 2020 (UTC)
 
அன்பரீர்
முக்கியப்பங்கு - முக்கியப் பங்கு: இரண்டுமே சரிதான்; நம் நற்பயனாய் ஆங்கிலம்போல் தமிழிலே தொடர்களின் இடையே இடைவெளி விடுகைக்கும் நிறுத்தக்குறிகட்கும் விரிந்த இறுக்கமான மரபு ஏதுமில்லை.
ஆங்கிலத்திலேயும் இடைவெளி விட்டாலும் ஒரே தொடராகப் பேசவேண்டியன மிகப்பரவல். மிக எளிய எடுத்துக்காட்டு:
* [https://www.merriam-webster.com/dictionary/high%20school high school]
* [https://www.merriam-webster.com/dictionary/footnote footnote]
இரண்டுக்கும் பேசுமுறை ஒன்றே; footnote - foot note என்பதைப் பிரித்து எழுதப் புதிய அடிப்படை ஏதுமில்லை. ஆனால் ஆங்கிலத்திலே ஏதோ அப்படியாகிவிட்டது.
அதனாலேதான் தமிழிலே நல்லபடியாக இப்படித் தேவையற்ற மரபுகள் இல்லையென்று கூறினேன். ஆனாலும் தேவைப்படும் இடங்களில் சீராகப் பின்பற்றினால் நன்று.
 
சில இடங்களில்தான் நாமே உணர்ந்து ஒரு வழக்கைப் பின்பற்றவேண்டும். சான்றாகத் தான்/தாம் போன்ற சொற்களுக்குச் சொல்லலாம். கீழ்க்கண்ட மூன்று வாக்கியங்களில் தாம் என்ற சொல்லுக்கு முன் இடைவெளியைச் சரியான சூழலிலே பின்பற்றினால் செய்திவாசிக்கை போன்ற சூழ்நிலைகளில் மீண்டு வாசித்துத் திருத்திப்படிக்க மறுவாய்ப்போ அழகோ இல்லாத நிலைகளில் வேகமாகப் படிக்கும்பொழுது உதவும்.
அல்லாவிட்டால் தடுமாறி மீண்டும் படிக்கவேண்டிய நிலைமை ஏற்பட நல்ல வாய்ப்புண்டு. ஆனால் சிலநேரங்களில் முந்தைய வாக்கியங்கலைக்கொண்டுகூட இதனைத் தீர்க்கமுடியலாம்.
# "அவர்தாமே இதைச் செய்துகாட்டப்போவதாக் கூறினார்; நான் அப்படிக் கூறவில்லையே!" <. இடைவெளிவிடாமை நன்று ... '''கூறினது''' அவர்தாம் வேறுயாரும் கூறவில்லை
# "அவர் தாமே இதைச் செய்துகாட்டப்போவதாகக் கூறினார்;" <- இடைவெளிவிடுகை நன்று! ...'''செய்துகாட்டப்போவது''' அவரே வேறு யாருமன்று
# "அவர் தாம் படித்துப்பார்த்தபொழுது எந்தப் பிழையும் இல்லையாமே; நீ படிக்கும்பொழுது மட்டும் எப்படிப் பிழையுண்டாயிற்று?" <- இடைவெளிவிடுகை நன்று! தாம் என்பதற்கும் நீ என்பதற்கும் வேறுபாட்டு முரண்.
 
மற்றபடியான பல நிலைகளில் மொழியை ஒழுங்காகப் பயின்ற யாரும் படிக்கும்போது "முக்கியப்", "பங்கு" என்று ஒவ்வொரு சொல்லையுந் தனியாகக் கண்டுகொண்டு படிபப்தில்லை.
மொழியைத் திறமாகத் தெரிந்திருக்கும் ஒருவர் தாம்படிக்கும்பொழுது இலக்கணம் தெரிவதால் அடுத்து என்ன சொல்லோ தொடரோ வரும் வாக்கியம் எப்படி முடிந்தாகவேண்டும் என்ற அந்த உள்ளுணர்ச்சியோடு இனி வருகின்ற சொற்களை முன்னமே கண்ணால் நோடி அவற்றையெல்லாம் உள்ளத்திலே தொகுத்து ஏற்ற அழுத்தந் திருத்தத்தோடுதான் படிப்பார்கள்; படிக்கவேண்டும். அப்படியல்லாவிட்டால் மொழிப்பயிற்சி பற்றவில்லை என்றுதான் பொருள்.
பழைய சுவடிமரபின்படி இடைவெளிகள் நிறுத்தக்குறிகள் ஏதுமில்லை என்பது தெரிந்ததே. அதையேதான் இயந்திர அச்சு வந்தபின்னரும் பின்பற்றினர்!
சான்றாக எல்லிசுத் துரை வெளியிட்ட இந்தப் பழைய திருக்குறட் பதிப்பினைக்காண்க: [https://archive.org/stream/thirukkural_201808/1812-ELLIS%20KURAL_k2opt#page/n9/mode/2up எல்லீஸ்-திருக்குறள்-அறப்பால்]
அங்கே இன்று அச்சிடுவதுபோற் சீர்க்குச் சீர் இடைவெளிகூடக் கிடையாது!
பொதுவாகத் தமிழிலே சிறுதொடர்களாய் இருந்தால் இடைவெளியின்றிக் கூட்டி யெழுதுவது உண்டு.
இது பெரிய கட்டுரையாகிவிட்டதே.
எம் முயற்சி தெளிவிற்கு உதவியிருக்குமென்று நம்புகின்றேன்.
--[[பயனர்:Perichandra|Perichandra]] ([[பயனர் பேச்சு:Perichandra|பேச்சு]]) 16:23, 10 மே 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kanags" இலிருந்து மீள்விக்கப்பட்டது