"திவாகர நிகண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

105 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
நூற்றாண்டு திருத்தம் செய்யப்பட்டது
(நூற்றாண்டு திருத்தம் செய்யப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[படிமம்:Divakara Nikandu.jpg|thumb|250px|right|[[திவாகர முனிவர்]] அருளிய சேந்தன் திவாகர நிகண்டு]]
 
'''திவாகர நிகண்டு''' என்னும் [[நிகண்டு]] நூல் [[கிபி]] [[8ம் நூற்றாண்டு|86 ஆம் நூற்றாண்டில்]] வாழ்ந்த [[திவாகர முனிவர்]] என்பவரால் இயற்றப்பட்டது.<ref>https://books.google.co.in/books?id=RAVuAAAAMAAJ&q=divakaram&dq=divakaram&lr=&cd=12&redir_esc=y</ref> இந்த நிகண்டினை இயற்றியவர் தொடர்பாகவும், அவரின் சமயம் தொடர்பாகவும், அது இயற்றப்பட்ட காலம் தொடர்பாகவும் முரண்பட்ட கருத்துக்களே ஆய்வாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அக்காலத்தில் இருந்த [[சேந்தன்]] என்னும் அரசனால் வேண்டப்பட்டு திவாகர முனிவர் இந்நுலை இயற்றியதால் '''சேந்தன் திவாகரம்''' என்றும் இந்நூல் அழைக்கப்படுகின்றது.<ref>சோ.இலக்குவன், ''கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு'', சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001</ref> இந்நூல் ''ஆதி திவாகரம்'' என்னும் நூலைத் தழுவி எழுதியதாகக் கருதப்படுகின்றது.
 
இந்நூல் 12 பிரிவுகளைக் கொண்டது. இதில் 2180 நூற்பாக்களால் 9500 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுளது. ஒவ்வொரு தொகுதியும், ஒரு பாட்டூடாகவே முற்றுப்பெறுகிறது. இந்நூலின் சிறப்புகளில் ஒன்று, இதில் பலபொருள் தரும் 384 சொற்கள் உள்ளன. மேலும் இந்நூலில் பெரும்பாலும் சங்க கால இலக்கிய சொற்கள் மிகுதியாகவும், பிற்கால சொற்கள் குறைவாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. [[தமிழ்|தமிழில்]] இன்றுள்ள [[நிகண்டு]]களில் இதுவே காலத்தால் முந்தியது.<ref>[http://www.tamilvu.org/courses/degree/a041/a0412/html/a0412554.htm 5.4.1 திவாகர நிகண்டு]</ref>
இந்த நிகண்டினை இயற்றியவர் ‘சைவன்‘ என ஒருசாராரும், ஆனால் பெரும்பான்மையான ஆய்வாளர்கள் ‘ஜைனன்‘ எனவும் கூறுவர். பேராசிரியர் வையாபுரி பிள்ளை இது பற்றித் தனது "History of Tamil Language and Literature" என்ற நூலின் பக்கம் - 164இல் "The earliest Nighandu (lexicon) in Tamil, Divakaram, is a Jain work. Forgetting this, Saivaite scribes and editors have placed Siva's name at the beginning of the first section in contravention of Jain practice" எனக் கூறியுள்ளார்.
 
‘சேந்தன் திவாகரம்’ என்ற நிகண்டானது, சென்னைக் கல்விச் சங்கத்துத் தாண்டவராய முதலியாரால் பதிப்பிக்கப்பட்ட பத்துத் தொகுதிகளின் மூலத்தையும், சென்னைக் கல்விச் சங்கத்து வித்துவான்களால் பதிப்பிக்கப்பட்ட மிகுதி இரண்டு மூலத்தையும் இணைத்து, 1923ஆம் ஆண்டில், முதன்முதலாக, அச்சு வடிவில் முழுமையான நூலாக வெளியிடப்பட்டிருந்தது. பின்னர், அது 1958ஆம் ஆண்டில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.
 
== திவாகரத்தின் 12 பிரிவுகள் ==
303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2970023" இருந்து மீள்விக்கப்பட்டது