பிரமோத் குமார் சூல்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமும், அத்துறைகளில் பெரிய முன்னேற்றங்களுக்கும் பெருமை சேர்த்த இவர், சமூகத்தின் அனைத்துப் பிரிவு புற்றுநோய் நோயாளிகளுக்கும் எந்தவிதமான பாகுபாடும் இன்றி சிகிச்சை அளித்துள்ளார். நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு மருத்துவமனையின் நெரிசலான தாழ்வாரங்களில் கூட நோயாளிகளை வரவேற்று பயங்கரமான இந்த நோய்க்கு பொறுமையாக இவர் சிகிச்சையளித்தார். புற்றுநோயைப் போன்ற ஒரு தீயநோயை இடைவிடாமல் எதிர்த்துப் போராடுவதற்கான சிகிச்சையை அளித்தது இவரது அர்ப்பணிப்பு தொண்டேயாகும்.
 
சூல்கா கல்வி கற்பித்தலில் மிகுந்த விருப்பம் கொண்டவராக இயங்கினார். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு ஆசிரியராக பணியாற்றினார். அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றிய காரணத்தால் [[தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம்]] திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புற்றுநோய் மையங்களை ஆய்வு செய்ய இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டார்.தேசிய தேர்வு வாரியத்தின் உறுப்பினராக பணியாற்றிய இவர் கதிரியக்க மருத்துவம் தொடர்பான பாடத்திட்ட உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். கதிரியக்க சிகிச்சையின் முனைவர் குழுவின் உறுப்பினராகச் செயல்பட்டு நாடு முழுவதும் உள்ள பல்வேறு புற்றுநோய் மருத்துவமனைகளில் பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நிபுணராகவும் சூல்கா பணியாற்றியுள்ளார். புதுதில்லியிலுள்ள குரு கோபிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகத்தின் கல்வி கழகத்தின் உறுப்பினருக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். பின்பு உருவரைவு மற்றும் கதிரியக்க சிகிச்சை துறைக்கான இந்திய தர நிர்ணய அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
 
புற்றுநோய் குறித்து தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் சூல்கா தீவிரமாக பங்கேற்றார். 1980 ஆம் ஆண்டு முதல் தேசிய தூர்தர்சன் அலைவரிசையில் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் அதன் மேலாண்மை குறித்து தொடர் பேச்சுக்களை சூல்கா நிகழ்த்தினார். அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் “பெண்களின் புற்றுநோய்”, “புகைத்தல் மற்றும் புற்றுநோய்”, “கைப்பேசி மற்றும் புற்றுநோய்” போன்ற தலைப்புகளில் பல்வேறு தொலைபேசி-நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொது மக்கள் மற்றும் நோயாளியின் கேள்விகளுக்கு இவர் பதிலளித்துள்ளார். ஓர் உண்மையான மனிதநேயன் என்ற முறையில் இவர் தன்னுடைய சேவையை செய்வதிலும் ஐயங்களை களைவதற்கும் எப்போதும் தயாராகவே இருந்தார். எனவே ஏராளமான ஊடக நிறுவனங்கள் மற்றும் வெளியீடுகளால் பெரிதும் மதிக்கப்பட்டார். செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் போன்ற பொது ஊடகங்களைப் பயன்படுத்தி பொது மக்களுக்கு நோய்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/பிரமோத்_குமார்_சூல்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது