பாண்டியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 119:
பாண்டிய நாட்டின் பெரும்பகுதிகள் கி.பி. 1020 முதல் 1070 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. [[இராஜராஜ சோழன்|இராசராசன்]] மகனான [[இராஜேந்திர சோழன்|இராசேந்திர சோழனின்]] மூன்று மகன்களான சுந்தரசோழ பாண்டியன், விக்கிரமசோழ பாண்டியன்,[[பராக்கிரம பாண்டியன்]] மூவரும் சோழ பாண்டியர் எனப் பட்டம்பெற்று பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சோழ மன்னர்களாவர். பாண்டிய நாட்டிற்கு இராசராச மண்டலம் எனப்பெயரிட்டு தங்கள் ஆட்சிக்கு முரண்பட்ட பாண்டியர்களை [[திறை]] செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்தனர்.
 
=== முகமதியர்சுல்தானியர் ஆட்சி ===
[[கில்ஜி பேரரசு|கில்ஜி பேரரசின்]] மன்னன் [[மாலிக்காபூர்|மாலிக்காபூரிடம்]] பாண்டிய மன்னனான [[சுந்தரபாண்டியன்|சுந்தரபாண்டியனால்]] தன் தம்பியான [[இரண்டாம் வீரபாண்டியன்|இரண்டாம் வீரபாண்டியனை]] வெல்ல உதவியினை நாடினான். இரண்டாம் வீரபாண்டியனை வெற்றி கொண்ட மாலிக்காபூர் சுந்தரபாண்டியனை அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. [[சயாவுடீன் பார்னி]] , [[அமீர்குசுரு]], [[வாசப்]] போன்றவர்களின் கூற்றுகள் படி மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் அமைந்திருந்த கோயில்களை இடித்து அங்கிருந்த [[பொன்]], [[பொருள்]]களைக் கொள்ளையிட்டு [[சிற்பம்|சிற்பங்கள்]] பலவற்றையும் சிதைப்பதற்குக் காரணமானான்<ref>தமிழர் நாகரிகமும் பண்பாடும், டாக்டர் அ.தட்சிணாமூர்த்தி, பக்கம்-448, மறுபதிப்பு, சூலை 2008, ''தமிழ் பண்பாட்டில் இசுலாம் சமயம்''</ref>. மேலும் கொள்ளையிட்ட பொருள்களை [[டில்லி]]க்குக் கொண்டு சென்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுந்தரபாண்டியன் மற்றும் [[இரண்டாம் வீரபாண்டியன்]] போன்றோரிடமிருந்து மாலிக்காபூர் 612 [[யானை]]கள், 20,000 [[குதிரை]]கள், 96,000 மணங்கு [[பொன்]], [[முத்து]] மற்றும் அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளினை எடுத்துச் சென்றான் என [[பார்னி]] என்பவன் குறித்துள்ளான்<ref>Keay, J. India, 2001, Grove Press; {{ISBN|0-8021-3797-0}}</ref>. 1320களில் மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றி 1378ஆம் ஆண்டு வரை ஆண்டான். அவன் வழி வந்தவர்கள் நாயக்கர்களால் தோற்கடிக்கப்பட்டார்கள்.<ref>அ.கி. பரந்தாமனார், மதுரை நாயக்கர் வரலாறு</ref> 1330 ஆம் ஆண்டளவில் பாண்டிய நாட்டில் முகமதியர் ஆட்சி நுழைந்தது. டில்லி [[துக்ளக்]]கின் அதிகாரியாகத் திகழ்ந்த '[[ஜலாலுடீன் அசன்சா|ஜலாலுதீன் அசன்ஷா]]' [[மதுரை]]யினைக் கைப்பற்றி ஆட்சி செய்தான். இவனது ஆட்சிக்குப் பின்னர் [[அல்லாவுடீன் உடான்றி]], [[குட்புதீன்]], [[நாசிருடீன்]], [[அடில்ஷா|அதில்ஷா]], [[பஃருடீன் முபாரக் ஷா]], [[அல்லாவுடீன் சிக்கந்தர்ஷா|அல்லாவுதீன் சிக்கந்தர்ஷா]] போன்றவர்களின் ஆட்சி மதுரையில் இருந்தது. இவர்கள் தம் பெயர்களினால் [[நாணயம்|நாணயங்கள்]] வெளியிட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் [[புதுக்கோட்டை]]யில் உள்ள இரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. [[இபின்படூடா]] என்பவரின் குறிப்பின் படி இம்மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுக் குழப்பங்கள்,கலகங்கள் ஏற்பட்டன. கோயில் வழிபாடு,விழா இன்றி சீரழிந்தன. பாண்டிய நாட்டு மக்கள் துன்புற்றனர் என அவர் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
"https://ta.wikipedia.org/wiki/பாண்டியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது