'''நூப்ரா பள்ளத்தாக்கு''' [[இந்தியா]]வின் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் [[லடாக்]] பள்ளத்தாக்கின் வட கிழக்கில் அமைந்துள்ளது. இது [[லே மாவட்டம்|லே மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமான [[லே (நகரம்)|லே]] நகரத்திலிருந்து 150 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கின் சராசரி உயரம் ஏறத்தாழ 10,000 அடி (3048 மீ). இந்த பள்ளத்தாக்கிற்கு செல்ல [[லே|லே நகரத்தில்]] இருந்து கார்டுங் லா கணவாயின் வழியாக பயணம் செய்ய வேண்டும்.<ref>[https://www.tourism-of-india.com/nubra-valley/ Nubra Valley]</ref>
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிச்சீட்டு தேவையில்லை. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிச்சீட்டு தேவைப்படுகிறது.