"ஒளியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
அனைவரும்
சி (→‎top: [[]])
(அனைவரும்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
[[1675]] ஆம் ஆண்டு ஓலசு ரோமர் (Olaus Roemer) என்ற [[டேனிய மொழி|டேனிய]] அறிவியலாளர், ஒளியின் வேகத்தை அளக்க முயற்சி செய்தார். ஒளியின் வேகம் நொடிக்கு, சுமார் 1,92,000 [[மைல்]]களென கண்டுபிடித்தார். [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்தைச்]] சேர்ந்த பேராசிரியர் ஆல்பர்ட் ஏ, மைக்கல்சன் (Albert A. Michelson) பல ஆராய்ச்சிகளின் பயனாக ஒளியின் வேகம், நொடிக்கு 1,86,284 மைல்களெனக் கண்டுபிடித்தார். ஒளி [[அலை]]யானது, ஒரு நொடியில் செல்லும் தூரமே, ஒளியின் வேகம் என்றழைக்கப்படுகிறது. இந்த வேகத்தில் பயணிக்கும் போது, சில பொருட்களின் வழியே உட்புகுந்து ஒளிப் பயணிக்கும். அத்தகையப் பொருட்களை, நாம் ஒளிபுகும் பொருள்கள் என்பர். எடுத்துக்காட்டாக கண்ணாடி, [[நீர்]], [[காற்று]] போன்றவற்றைக் கூறலாம். பெரும்பாலான மற்றப் பொருள்கள் ஒளியைத் தன்னூடே செல்ல தடுத்து விடும். இவை ஒளிபுகாப்பொருள்கள் (Opaque) எனப்படும். சில பொருள்கள் தம்மீது படும் ஒளியின் ஒரு பகுதியைத் தடுத்துவிட்டு, மற்றொரு பகுதியை மட்டும் தன்னூடே செல்லவிடும். இவை ஒளி கசியும் பொருள்கள் என அழைக்கப் படுகின்றன. எடுத்துக்காட்டாக, [[மூடுபனி|மூடுபனி]], வெள்ளைக் [[காகிதம்]], சொரசொரப்பாகத் தேய்த்த [[கண்ணாடி]] போன்றவைகளைக் கூறலாம்.
 
[[1861]] ஆம் ஆண்டு, ஆங்கில அறிவியலாளர் ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் என்பார் ஒளியின் [[மின்காந்த அலை]]க் கொள்கையைக் கண்டறிந்தார். இதன்படி ஒளி அலைகள், ஒலி அலைகளைப் போலன்றி, மின்காந்த இயல்புடையன என்ற அறிவியல் தன்மையை அனவரும்அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
 
[[1900]] ஆம் ஆண்டு, மாக்ஸ் பிளாங்க் என்பார் [[குவாண்டம் புலக்கோட்பாடு|குவான்டம் கொள்கை]]யை வெளியிட்டார். இவர் ஒளியானது துகள் பண்புடையது என்றும், ஆனால் அது அலைகளாகவே செல்லுகின்றது என்றும் கூறினார். ஆகவே இந்தக் கொள்கை நியூட்டன் கொள்கையையும், ஏகன்சு கொள்கையையும் இணைப்பதாக அறியப்படுகிறது. புதிதாகக் கண்டறியப்படும் அறிவியல் உண்மைகள் அனைத்தையும் ஏற்கத்தக்கவாறு, ஒரே கொள்கையை வகுக்கச் சோதனைகள், தொடர்ந்து நடந்து வருகின்றன.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2975254" இருந்து மீள்விக்கப்பட்டது