"மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

100 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-பிரிட்டன் +பிரிட்டன்)
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன)
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-பிரிட்டன் +பிரிட்டன்))
 
 
{{போர்த்தகவல்சட்டம் மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)}}
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] ''' [[ஐரோப்பிய களம்|ஐரோப்பிய களத்தின்]] மேற்குப் போர்முனை''' (''Western Front in World War II'') [[டென்மார்க்]], [[நெதர்லாந்து]], [[பெல்ஜியம்]], [[ஐக்கிய இராச்சியம்|பிரிட்டன்]], [[பிரான்சு]], [[லக்சம்பர்க்]] மற்றும் [[நாசி ஜெர்மனி]]யின் மேற்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. இங்கு இரு கட்டங்களாகப் பெரும் போர் நடைபெற்றது. முதல் கட்டத்தில் 1939-40ல் ஜெர்மானியப் படைகள் [[பிரான்சு சண்டை|பிரான்சு]], [[பெல்ஜியம் சண்டை|பெல்ஜியம்]], [[லக்சம்பர்க் படையெடுப்பு|லக்சம்பர்க்]], [[நெதர்லாந்து சண்டை|நெதர்லாந்து]] ஆகியவற்றைக் கைப்பற்றின. இக்கட்டம் பிரிட்டனுடனான [[பிரிட்டன் சண்டை|வான்படை சண்டையில்]] ஜெர்மானியத் தோல்வியுடன் முடிவடைந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்போர்முனையில் பெரிய மோதல்கள் எதுவும் நிகழ வில்லை. இரண்டாம் கட்டம் ஜூன் 1944ல் பிரான்சு மீதான [[நேச நாடுகள்|நேச நாட்டு]] படைகளின் கடல்வழிப் [[ஓவர்லார்ட் நடவடிக்கை|படையெடுப்பு]]டன் தொடங்கியது. மே 1945ல் [[ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு|ஜெர்மனியின்]] சரணடைவுடன் முற்றுப்பெற்றது.
 
==1939-40: அச்சு நாடுகளின் வெற்றிகள்==
===போலிப் போர்===
{{main|போலிப் போர்}}
1930களின் இறுதியில் [[நாசி ஜெர்மனி]]க்கும் நேசநாடுகளான [[ஐக்கிய இராச்சியம்|பிரிட்டன்]] மற்றும் [[பிரான்சு|பிரான்சிற்கும்]] இடையே போர் மூளுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகியது. நேசநாட்டுக் கூட்டணியில் ஜெர்மனியின் கிழக்கெல்லையில் அமைந்திருந்த [[போலந்து]] நாடும் இடம் பெற்றிருந்தது. ஜெர்மனி போலந்தைத் தாக்கினால் பிரிட்டனும், பிரான்சும் அதன் உதவிக்கு வர வேண்டும் என்று அவை ஒப்பந்தம் செய்திருந்தன. செப்டம்பர் 1930ல் [[ஹிட்லர்|ஹிட்லரின்]] ஆணைப்படி ஜெர்மானியப் படைகள் [[போலந்து படையெடுப்பு|போலந்தைத் தாக்கின]]. முன் செய்திருந்த ஒப்பந்ததின்படி பிரான்சும், பிரிட்டனும் ஜெர்ம்னியின் மீது [[போர் சாற்றுதல்|போர் சாற்றின]]. ஆனால் ஜெர்மனியைத் தாக்க எந்தவொரு பெருமுயற்சியும் மேற்கொள்ளவில்லை.
 
ஜெர்மானியப் படைகளின் பெரும்பகுதி கிழக்கில் போலந்தில் போரிட்டுக் கொண்டிருந்த போது அந்நாட்டின் மேற்கெல்லையை குறைந்த அளவு படைகளே பாதுகாத்து வந்தன. பிரான்சு அரைமனதாக ஜெர்மனியின் மேற்கு எல்லையில் ஒரு தாக்குதல் நிகழ்த்தியது. [[சார் படையெடுப்பு]] என்றழைக்கப்படும் இத்தாக்குதலை பிரான்சு சீக்கிரம் நிறுத்திக் கொண்டதால் ஜெர்மனிக்கு இழப்பேதும் ஏற்படவில்லை. இதன் பின்னர் மேற்குப் போர்முனையில் ஏழு மாதங்கள் இழுபறிநிலை நீடித்தது. நேசநாடுகள் தங்கள் போர் ஆயத்தங்களை விரிவு படுத்தின. பிரிட்டன் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வுடன் [[கடன்-குத்தகை ஒப்பந்தம்|கடன்-குத்தகை ஒப்பந்தம்]] செய்து கொண்டது. இதன் மூலம் அமெரிக்காவிலிருந்து பெருமளவில் தளவாடங்களை வாங்கத் தொடங்கியது. ஐரோப்பாவின் மையப் பிரதேசத்தில் இழுபறி நிலை நீடித்தாலும், பிற இடங்களில் போர்கள் மூண்டு கொண்டிருந்தன. செப்டம்பர் [[1939]] முதல் மே [[1940]] வரை நீடித்த இந்த மந்த நிலை “போலிப் போர்” என்று வர்ணிக்கப்படுகிறது.
1,00,033

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2975604" இருந்து மீள்விக்கப்பட்டது