மனித மூளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 8:
மனித மூளை, தடிப்பான [[மண்டையோடு|மண்டையோட்டின்]] [[எலும்பு]]களாலும், [[மூளை முதுகுத் தண்டுநீர்மம்]] (''cerebrospinal fluid'') என்னும் [[நீர்மம்|நீர்மத்தாலும்]], அதிர்வுகளிலிருந்தும், வெளிச் சேதங்களிலிருந்தும், [[குருதி-மூளை வேலி]] (''blood-brain barrier'') என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டத்திலிருந்தும், [[இரத்தம்]] மூலம் பரவும் [[நோய்]]களில் இருந்தும் தீங்குறாமல் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது. ஆனாலும், அதன் மென்மையான தன்மையால் பல வகை நோய்களாலும், சேதங்களாலும் தீங்குகள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது.
 
பொதுவாக மூளையில் ஏற்படும் சேதங்கள், [[உள் தலை காயங்கள்]] (''closed head injuries'') எனப்படும் வகையை சார்ந்த, தலையில் ஏற்படும் காயம், மூளையில் இரத்த தடை ஏற்படுவதால் ஏற்படும் [[பக்கவாதம்]] (''stroke''), [[நரம்பு நச்சு]]கள் (''neurotoxin'') எனப்படும் [[வேதியியல்]] [[நச்சுப்பொருள்|நச்சுப் பொருட்களால்]] பாதிக்கப்படுதல் ஆகியன குறிப்பிடத் தக்கவை. மூளை [[தொற்றுநோய்]]களால் பாதிக்கப்படுவது மிக அரிதானது. ஏனெனில், இரத்த மண்டலத்தில் கலந்து [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களைத்]] தாக்கக் கூடிய பெரும்பாலான [[பாக்டீரியா]] கிருமிகளை, மனித மூளையில் [[குருதி-மூளை வேலி]] என்ற அமைப்பு வடிகட்டி விடுவதன் மூலம், மூளை தொற்றுநோய் [[நுண்ணுயிரி]]களில் இருந்து பெரும்பாலும் பாதுகாக்கப் படுகிறது. இருப்பினும், மூளை பாக்டடீரியாவால் அரிதாக தாக்கப்படும் போது, [[பிறஒருளெதிரி]] (''antibodies'') மூலம் சிகிச்சை அளிப்பது மிக கடினமானதாகிறது. ஏனெனில் இதே [[குருதி-மூளை வேலி]] அமைப்பு நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தடுத்து நிறுத்தி விடுவதே காரணம். [[தீநுண்மம்]] (வைரசு) எளிதாக குருதி-மூளை வேலியை தாண்ட வல்லவை. இவை இரத்தத்தில் உள்ள [[வெண்குருதியணு]]க்களுடன் சேர்ந்து தாண்டுகின்றன. இவை தவிர பொதுவாகக் காணப்படும் பல [[மரபியல்]] நோய்களும்[[மனிதமூளை]] மூளையைத் தாக்க வல்லவை. அவற்றுள், [[நடுக்குவாதம்]] (பார்கின்சன் நோய்), உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே நரம்பு மண்டலத்தை தாக்கும் [[மல்டிபிள் சுகுலோரோசிஸ்]] (''multiple sclerosis'') ஆகியவை முக்கியமானவை. [[உளவியல்]] நோய்களான [[மனத்தளர்ச்சி|உளச்சோர்வு]], [[தாழ்வு மனப்பான்மை]], [[மந்த அறிவு]] ஆகியவையும் மூளையில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றுகின்றன.
 
== அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/மனித_மூளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது