"சுரேஷ் சம்பந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,196 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
சி
விரிவாக்கம்
சி (புகைப்படம் இணைக்கப்பட்டது)
அடையாளம்: 2017 source edit
சி (விரிவாக்கம்)
அடையாளம்: 2017 source edit
 
== கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை ==
சுரேஷ் சம்பந்தம் தமிழ்நாட்டின் புதுச்சேரிக்கு அருகில் உள்ள கடலூர் எனும் மூன்றாம் நிலை நகரில் பிறந்தார். ஒரு தன்னாக்க தொழில் முனைவோர் ஆன இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை [[கடலூர்]] புனித ஜோசப் பள்ளியில் 1990 ஆம் ஆண்டு முடித்தவுடன் தன் 17-ம் வயதில் தன் தந்தையாரின் நிலம், மனை, சொத்து விற்பனை தொழிலில் ஈடுபட்டார். பின்னர் 1993-ம் ஆண்டு தொலைதூரக் கல்வி முறையில் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றார்<ref name="Rediff">{{cite news|last1=N|first1=Ramakrishnan|title=The inspiring story of a million-dollar company|url=https://www.rediff.com/business/slide-show/slide-show-1-inspiring-story-of-a-million-dollar-company/20120821.htm|work=[[Rediff.com]]|date=21 August 2012}}</ref>. தன்னுடைய 19-ம் வயதில் முதல் தொழிலைத் தொடங்கி சிறிது காலத்திற்குப்பின் [[ஹெவ்லட்-பேக்கர்ட்]](HP) மற்றும் செலக்டிகா(selectica) ஆகிய அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தார்.
 
சுரேஷ் சம்பந்தம் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களான [[ஹெவ்லட்-பேக்கர்ட்]](HP) மற்றும் செலக்டிகா(selectica) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். [[ஹெவ்லட்-பேக்கர்ட்]](HP) நிறுவனத்தில் மென்பொருள் பகுப்பாய்வாளராகப் 1997-ம் வருடம் பணியில் சேர்ந்த இவர் அங்கு 2000-ம் ஆண்டு வரை பணியில் இருந்தார். பின்னர் செலக்டிகா(selectica) நிறுவனத்தில் குழுத்தலைவராக காப்பீட்டுத்துறை தொடர்பான மென்பொருள் உருவாக்கத்தில் தன் சொந்த நிறுவனமான ஆரஞ்சுஸ்கேப்-ஐ தொடங்கும் வரை பணியாற்றினார்.
 
==ஆரஞ்சுஸ்கேப்==
சுரேஷ் சம்பந்தம் தன்னுடன் முந்தைய நிறுவனங்களில் பணிபுரிந்த மற்ற 4 குழுத்தலைவர்களுடன் இணைந்து 2003-ம் ஆண்டு ஆரஞ்சுஸ்கேப்-ஐ நிறுவினார். '' ஆரஞ்சுஸ்கேப் '' நிறுவனம் [[சென்னை|சென்னையை]] தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது.வரும் இந்நிறுவனம் பணியிட சுரேஷ்தானாக்க சம்பந்தம்மென்பொருள்(workplace தன்னுடன்automation முந்தைய நிறுவனங்களில் பணிபுரிந்த மற்ற 4 குழுத்தலைவர்களுடன் இணைந்து ஆரம்பித்த இந்நிறுவனம்platform), சாஸ்(ஆங்கிலம்: SaaS - Software as a Service) எனப்படும் மென்பொருளை சேவையாக தரும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்கிறது. இந்நிறுவனம் இந்தியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தனது அலுவலகங்களைக் கொண்டுள்ளது. 2012-ம் ஆண்டு [[கூகிள்|கூகிளின்]], கூகுள் மேகக்கணிம தளத்தை(Google Cloud Platform) அடிப்படையாகக்கொண்டு [[கிஸ்ஃபுலோ]](ஆங்கிலம்: Kissflow) எனப்படும் Digital Workplace மென்பொருளை வெளியிட்டது. இது இந்நிறுவனத்தின் முதன்மையான மற்றும் இத்துறையின் முன்னோடி மென்பொருள் ஆகும்.
 
2012-ம் ஆண்டு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை இந்திய ஆரம்ப நிலை முதலீட்டாளர்களிடமிருந்து(Angel investors) முதலீடாகப் பெற்றது<ref name="vccircle">{{cite news|last1=Das|first1=Nandana|title=
OrangeScape Raises $1M Angel Funding From IAN|url=https://www.vccircle.com/orangescape-raises-1m-angel-funding-ian|date=5 May 2012}}</ref>.
 
==பொது வாழ்க்கை==
சுரேஷ் சம்பந்தம் சாஸ் தொடர்பான சாஸ்பூமி(SaaSBoomi) எனப்படும் ஆசியாவின் பெரிய சாஸ் கலந்தாய்வு மாநாட்டின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார்<ref name="financialexpress1">{{cite news|last1=Kumar|first1=Sajan|title=Chennai To host SaaS BooMi, Asia’s largest SaaS conference|url=https://www.financialexpress.com/industry/chennai-to-host-saas-boomi-asias-largest-saas-conference/1444882/|work=[[The Financial Express (India)|The Financial Express]]|date=16 January 2019}}</ref>. மேலும் தொழில் முனைவு குறித்து இவர் பல தொழில் சார் மன்றங்களிலும், கல்லூரிகளிலும் 'சங்கே முழங்கு' உள்ளிட்ட தலைப்புகளில் தொடர்ந்து உரையாற்றிவருகிறார். [[ஃபோர்ப்ஸ்]](Forbes), ஆந்த்ரப்புரூனர் இதழ்(Entrepreneur magazine), மீடியம்-இணையதளம்(Medium-website), ஆங்கில நாளிதழான [[தி இந்து]] உள்ளிட்டவற்றில் தொழில் சார்ந்த தலைப்புகளில் எழுதிவருகிறார்.
 
== விருதுகள் ==
2,512

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2976684" இருந்து மீள்விக்கப்பட்டது