ஐன் ஜலுட் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
மங்கோலியர்கள் ஒரு பிராங்கோ-மங்கோலியக் கூட்டணியை ஏற்படுத்த முயற்சித்தனர் அல்லது குறைந்தது அக்ரேவைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த சிலுவைப்போர் [[எருசலேம் பேரரசு|எருசேல இராச்சியத்தின்]] எஞ்சிய பகுதிகளை அடிபணியவாவது கோரினர். ஆனால் திருத்தந்தை நான்காம் அலெக்சாந்தர் அதற்குத் தடை விதித்தார். பிராங்குகள் மற்றும் மங்கோலியர்களுக்கு இடையிலும் பிரச்சினைகள் அதிகமானது. சிதோனின் சூலியன் கித்புகாவின் பேரன்களில் ஒருவர் இறப்பதற்குக் காரணமான ஒரு நிகழ்வை ஏற்படுத்தினார். கோபமடைந்த கித்புகா [[சிதோன்|சிதோனைச்]] சூறையாடினார். அக்ரேவின் சீமான்கள் மற்றும் எஞ்சிய சிலுவைப்போர் புறக்காவல் நிலையங்கள் மங்கோலியர்களால் தொடர்பு கொள்ளப்பட்டன. அதே நபர்களை மங்கோலியர்களுக்கு எதிராக இராணுவ உதவி கோருவதற்காக மம்லூக்குக்களும் தொடர்பு கொண்டனர்.<ref name="Tschanz"/>
 
பிராங்குகளின் பாரம்பரிய எதிரிகளாக மம்லூக்குகள் இருந்த போதிலும் அக்ரேவின் சீமான்கள் மங்கோலியர்களை அதிகப்படியான மற்றும் உடனடி அச்சுறுத்தலாகக் கருதினர். எனவே சிலுவைப் போர் வீரர்கள் இரண்டு படைகளுக்கும் ஆதரவின்றி கவனத்துடன் நடுநிலையாக இருக்கும் முடிவை எடுத்தனர்.<ref>Morgan, p. 137.</ref> வழக்கத்திற்கு மாறான செயலாக, அவர்கள் எகிப்திய மம்லூக்குகள் வடக்கே தங்களது சிலுவைப்போர் அரசுகளின் வழியாக தொல்லைக்கு உட்படுத்தப்படாமல் கடக்கச் சம்மதித்தனர். அக்ரேவுக்கு அருகில் அவர்கள் பொருட்களை நிரப்ப முகாம் அமைத்து கொள்ளவும் கூட சம்மதித்தனர். [[யோர்தான் ஆறு|யோர்தான் ஆற்றை]] மங்கோலியர்கள் கடந்த செய்தி வந்தபோது சுல்தான் குதுஸ் மற்றும் அவரது படைகள் தென்கிழக்கு திசையில் செசிரீல்செசுரீல் பள்ளத்தாக்கில் இருந்த ஐன் ஜலுட்டின் ஊற்றை நோக்கிச் சென்றன.<ref name="bartlett-253">Bartlett, p. 253</ref>
 
==யுத்தம்==
முதன்முதலில் மங்கோலியர்கள் முன்னேறினர். அவர்களது படையில் மங்கோலிய அதிகாரத்திற்குக் கட்டுப்பட்ட [[சார்சியா இராச்சியம்]] மற்றும் சிசிலியாவின் ஆர்மீனிய இராச்சியத்தின் 500 துருப்புகள் உள்ளிட்ட துருப்புகள் இருந்தன. அந்த நிலப்பகுதியை அறிந்திருந்ததால் குதுஸ் நன்மை அடைந்திருந்தார். இதன் காரணமாகத் தனது படையில் பெரும்பாலானவற்றை உயர்நிலப் பகுதிகளில் மறைத்து வைத்தார். பைபர்ஸ் தலைமையில் ஒரு சிறிய படையை அனுப்பி மங்கோலியர்களுக்குத் தூண்டில் இடலாம் என நம்பினார்.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/ஐன்_ஜலுட்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது