ஐன் ஜலுட் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
 
இரண்டு இராணுவங்களும் பல மணி நேரங்களுக்குச் சண்டையிட்டன. மங்கோலியத் துருப்புக்களைக் கோபமூட்டுவதற்காக அடித்து விட்டு ஓடும் தந்திரங்களைப் பைபர்ஸ் செயல்படுத்தினார். அவர்களது துருப்புகளில் பெரும்பாலானவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பைபர்ஸ் ஒரு தப்பியோடியவராகத் தனது வாழ்க்கையை முன்னர் இந்தப் பகுதியில் வாழ்ந்து இருந்ததால் அவருக்கு இப்பகுதியை பற்றி நன்கு தெரிந்திருந்தது. அவரே பெரும்பாலான யுத்த தந்திரங்களை திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது. மங்கோலியர்கள் மற்றொரு கடினமான தாக்குதலை நடத்தியபோது, பைபர்ஸ் மற்றும் அவரது வீரர்கள் கடைசியாகத் தோற்று ஓடுவதுபோல் ஓடி, மங்கோலியர்களை உயரமான நிலப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மரங்களிடையே மறைந்திருந்த மம்லூக்குகள், மங்கோலியர்கள் மீது பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தினர். பைபர்ஸ் மற்றும் அவரது துருப்புகள் தொடர்ந்து ஓடியதால் கோபப்பட்டிருந்த மங்கோலியத் தலைவர் கித்புகா ஒரு பெரும் தவறைச் செய்தார். தந்திரத்தைச் சந்தேகிப்பதற்குப் பதிலாக, தப்பி ஓடியவர்களின் பின் தனது அனைத்துத் துருப்புகளுடன் அணி வகுத்தார். மங்கோலியர்கள் உயரமான நிலப்பகுதிகளை அடைந்தபோது மம்லூக்குகள் மறைவிலிருந்து வெளிவந்தனர். மங்கோலியர்கள் மீது அம்புகளை எய்தும், தங்களது குதிரைப்படையைக் கொண்டும் தாக்கினர். தாங்கள் அனைத்து பக்கங்களிலும் சூழப்பட்டதை மங்கோலியர்கள் உணர்ந்தனர். மேலும், மங்கோலியர்களின் சிரிய கூட்டாளிகள் மம்லூக்குகள் பக்கம் சேர்ந்தது இந்த யுத்தத்தின் ஒரு முக்கியமான கணம் என்ற கருதுகோளை திமோதி மே என்ற வரலாற்றாளர் கூறுகிறார்.<ref>Timothy May, the Mongol Art of War (2016).</ref>
 
இந்தச் பயணமாகவும் சூழலில் இருந்து வெளியேற மங்கோலிய இராணுவமானது மிகக் கடினமாகவும், மிக ஆக்ரோஷமாகவும் சண்டையிட்டது. சற்று தொலைவில் தனது பாதுகாவலர்களுடன் குதுஸ் கவனித்துக் கொண்டிருந்தார். எப்படியாவது வெளியேறுவதற்கு ஒரு வழியைத் தேடிய மங்கோலியர்களின் தாக்குதலால் மம்லூக் இராணுவத்தின் இடது பிரிவானது கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு வந்ததைக் கண்டு தனது [[போர்க்களத் தலைக்கவசம்|போர்க்களத் தலைக்கவசத்தைத்]] தூக்கி எறிந்தார். இதன் மூலம் அவரை அவரது வீரர்கள் கண்டுகொள்ள முடியும் என்பதற்காக அவர் இப்படி செய்தார். அடுத்த கணம் யுத்த களத்தை நோக்கி வேகமாக ''வா இஸ்லாமா!'' ("எனது இஸ்லாமே") என்று கத்திக் கொண்டு விரைந்தார். தனது இராணுவத்தை நிலையாகப் போரிடுமாறு அறிவுறுத்தினார். பலவீனமான பகுதியை நோக்கித் தனது பிரிவுடன் விரைந்தார். மங்கோலியர்கள் பின் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பிசன் நகருக்கு அருகே இருந்த பகுதிக்குத் தப்பினர். அவர்களை குதுஸின் படைகள் துரத்தின. ஆனால் மங்கோலியர்கள் மீண்டும் ஒருங்கிணைந்து யுத்தகளத்திற்கு வந்தனர். வெற்றிகரமாகப் பதில் தாக்குதல் நடத்தினர். எனினும் யுத்தமானது மம்லூக்குகள் பக்கம் சாய்ந்தது. மம்லூக்குகள் புவியியல் மற்றும் உளவியல் அனுகூலத்தைக் கொண்டிருந்தனர். கடைசியாகச் சில மங்கோலியர்கள் பின் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். கித்புகா மற்றும் கிட்டத்தட்ட அப்பகுதியில் இருந்த எஞ்சிய மங்கோலிய இராணுவம் முழுவதும் அழிந்தது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/ஐன்_ஜலுட்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது