ஐன் ஜலுட் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
 
பெரிய கான் யாரென்ற பிரச்சனையில், கடைசியாகக் [[குப்லாய் கான்]] கடைசிப் பெரிய கானாகப் பதவியேற்ற பிறகு, ஹுலாகு தனது நிலங்களுக்கு 1262 ஆம் ஆண்டு வந்தார். மம்லூக்குகளைத் தாக்க மற்றும் ஐன் ஜலுட்டிற்குப் பழிவாங்கத் தனது இராணுவங்களைத் திரட்டினார். எனினும் பெர்கே தொடர்ச்சியான பல சோதனை ஓட்டங்களை நடத்தி ஹுலாகுவை [[லெவண்ட்]] பகுதியில் இருந்து வடக்கு நோக்கி அவரைச் சந்திப்பதற்காக இழுத்தார். 1263 ஆம் ஆண்டு [[காக்கேசியா|காக்கேசியாவிற்கு]] வடக்கே நடத்திய ஒரு படையெடுப்பு முயற்சியில் ஹுலாகு கடும் தோல்வியைச் சந்தித்தார். இப்போர் தான் மங்கோலியர்களுக்கு இடையிலான முதல் வெளிப்படையான போர். ஒன்றுபட்ட பேரரசின் முடிவிற்கு இது சமிக்ஞை கொடுத்தது.
 
ஐன் ஜலுட்டிற்குப் பிறகு, மம்லூகுகளைத் தாக்குவதற்கான தனது ஒரே முயற்சியில், ஹுலாகுவால் இரண்டு தியுமன்கள் அடங்கிய ஒரு சிறிய இராணுவத்தை மட்டுமே அனுப்ப முடிந்தது. அந்த இராணுவமும் முறியடிக்கப்பட்டது. 1265 ஆம் ஆண்டு ஹுலாகு கான் இறந்தார். அவருக்குப் பின் அவர் மகன் அபகா ஆட்சிக்கு வந்தார்.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/ஐன்_ஜலுட்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது