ஐன் ஜலுட் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
 
ஐன் ஜலுட் யுத்தமானது மங்கோலிய விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை அல்லது அவர்களது படையெடுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. 1299 ஆம் ஆண்டு கசன் கான் தலைமையிலான [[ஈல்கானரசு]] இராணுவமானது மம்லூக்குகளை வாடி அல்-கசந்தர் யுத்ததில் தீர்க்கமாகத் தோற்கடித்தது. திமிஷ்குவைக் கைப்பற்றியது. காசா வரை சென்றது. ஆனால் குதிரைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் இல்லாத நிலை மற்றும் அந்நேரத்தில் [[சகதாயி கானரசு|சகதாயி கானரசுடன்]] நடந்துகொண்டிருந்த போர் ஆகியவைக் கசனைத் தனது இராணுவத்தை வட கிழக்கு ஈரானுக்கு அழைக்கும் நிலைக்கு உள்ளாக்கியது. இந்தப் படையெடுப்பு முடிந்தபிறகு கசன் மற்றொரு சிறிய படையைச் சிரியாவுக்கு அனுப்பினார். ஆனால் அப்படை இந்த யுத்தத்தை விட முக்கியமான யுத்தமான மர்ஜ் அல்-சபர் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டது. அந்த யுத்தமே மங்கோலிய விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக அமைந்தது. சகதை வழித்தோன்றல்களுக்கு எதிரான போர் மற்றும் கசனின் மோசமாகிக் கொண்டிருந்த உடல்நலம் ஆகியவை அவரைப் பதில் தாக்குதல் நடத்த இயலாமல் செய்தன. 1305 ஆம் ஆண்டு கசன் இறந்தார்
 
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், ஐன் ஜலுட் யுத்தம் தான் முதன் முதலில் ஒரு மங்கோலியப் படையானது தோற்கடிக்கப்பட்டு, தோல்விக்குப் பழி தீர்க்க ஒரு வலிமையான படையுடன் உடனே திரும்பி வராத நிகழ்வாகும். இந்த யுத்தம் மற்ற யுத்தங்களுடன் கவனிக்கப்படும் பொழுது சிறியதெனினும், எதிர்கால மங்கோலிய விரிவாக்க முயற்சிகளுக்கு ஒரு பிரச்சினை இருப்பதை வெளிக்காட்டியது. தாக்கவோ அல்லது பழி தீர்க்கவோ முற்படும் மங்கோலியப் படைகள் அடிக்கடி ஒரு முக்கியக் கான் இறப்பதாலோ அல்லது மற்ற மங்கோலிய கானரசுகளுடன் சண்டையிடுவதன் காரணமாகவோத் தங்களது கவனத்தில் இருந்து திசை மாற்றப்பட்டன.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/ஐன்_ஜலுட்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது