செங்கிஸ் கானின் வளர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1162இல் தெமுசினாகப் பிறந்தது முதல் 1206 வரையிலான ககானின் வாழ்க்கை நிகழ்வுகள்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''செங்கிஸ் கான்|செங்கிஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:01, 26 மே 2020 இல் நிலவும் திருத்தம்

செங்கிஸ் கானின் வளர்ச்சி என்பது 1162 ஆம் ஆண்டு தெமுசினாகப் பிறந்தது முதல், 1206 ஆம் ஆண்டு அவருக்குச் "செங்கிஸ் கான்" (சில நேரங்களில் "சிங்கிஸ் கான்") என்ற பட்டம் வழங்கப்பட்டது வரை நடந்த நிகழ்வுகளைக் குறிப்பதாகும். இப்பெயருக்குப் "பிரபஞ்ச ஆட்சியாளர்" அல்லது "பெருங்கடல் ஆட்சியாளர்" என்று பொருள்.

செங்கிஸ் கானுக்கு முந்தைய மங்கோலியர்கள்

 
கிதான் லியாவோ அரசமரபின் (907–1125) காலத்தில் மங்கோலியப் பழங்குடியினங்களின் அமைவிடங்கள்

மங்கோலியர்கள் முதன்முதலில் தாங் அரசமரபின் வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஷிவேயி மக்களின் ஒரு கிளைப் பிரிவினர் என்று அவர்களைப் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஷிவேயி மக்கள் 553 முதல் 745 ஆம் ஆண்டு வரை கோக்துருக்கியர்களுக்குக் கப்பம் கட்டுவார்களாக இருந்தனர். ஷிவேயி மக்கள் 10 ஆம் நூற்றாண்டுவரை சிறிய கிங்கன் மலைப்பகுதிகளில் வசித்தனர். அந்நேரத்தில் மங்கோலியர்கள் அர்குன் ஆற்றுப்பக்கம் இடம்பெயர்ந்தனர். கிதான்களுக்குக் கப்பம் கட்டுபவர்களாக மாறினர். 11 ஆம் நூற்றாண்டில் ஆனன் ஆறு மற்றும் கெர்லென் ஆறுகளை அடையும்வரை மங்கோலியர்கள் மேற்கு நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர்.[1]

உசாத்துணை

  1. Twitchett 1994, ப. 329.