செங்கிஸ் கானின் வளர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''செங்கிஸ் கான்|செங்கிஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 5:
 
[[மங்கோலியர்|மங்கோலியர்கள்]] முதன்முதலில் [[தாங் அரசமரபு|தாங் அரசமரபின்]] வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஷிவேயி மக்களின் ஒரு கிளைப் பிரிவினர் என்று அவர்களைப் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஷிவேயி மக்கள் 553 முதல் 745 ஆம் ஆண்டு வரை கோக்துருக்கியர்களுக்குக் கப்பம் கட்டுவார்களாக இருந்தனர். ஷிவேயி மக்கள் 10 ஆம் நூற்றாண்டுவரை சிறிய கிங்கன் மலைப்பகுதிகளில் வசித்தனர். அந்நேரத்தில் மங்கோலியர்கள் [[அர்குன் ஆறு (ஆசியா)|அர்குன் ஆற்றுப்பக்கம்]] இடம்பெயர்ந்தனர். கிதான்களுக்குக் கப்பம் கட்டுபவர்களாக மாறினர். 11 ஆம் நூற்றாண்டில் [[ஆனன் ஆறு]] மற்றும் [[கெர்லென் ஆறு|கெர்லென் ஆறுகளை]] அடையும்வரை மங்கோலியர்கள் மேற்கு நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர்.{{sfn|Twitchett|1994|p=329}}
 
மங்கோலியப் புராணப்படி சொர்க்கத்திலிருந்து வந்த நீல-சாம்பல் வண்ண ஓநாய் மற்றும் ஒரு வெளிர் மஞ்சள்-பழுப்பு வண்ண மான் ஆகியவற்றிலிருந்து மங்கோலியர்கள் தோன்றினர். ஓநாயும் மானும் ஒரு ஏரியைக் கடந்து [[புர்கான் கல்துன்]] மலையை அடைந்தன. அங்கே அந்த மானுக்கு ஒரு ஆண் மனிதக் குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் பெயர் பாட் திசகன். அவர் தான் அனைத்து மங்கோலியர்களின் முன்னோர் ஆவார். பாட் திசகனின் வழிவந்தவர்களில் 11 ஆம் தலைமுறை ஆணான தோபுன் மெர்கென், கொரிலார் இனத்தை சேர்ந்த ஆலன் கோவா என்ற ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். தோபுன் மெர்கென் இறந்தபிறகு ஆலன் கோவாவுக்கு [[போடோன்சார் முன்ஹாக்]] என்ற ஒரு குழந்தை பிறந்தது. இந்த போடோன்சார் முன்ஹாக் தான் [[போர்சிசின்]] பழங்குடியினப் பிரிவை நிறுவியவர் ஆவார்.{{sfn|Twitchett|1994|p=330}}
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/செங்கிஸ்_கானின்_வளர்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது