அல்லாஹ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{இசுலாம்}}
{{இஸ்லாம்}}
[[படிமம்:Allah.svg|thumb|left|200px|அரபு மொழி எழுத்துகளில் ''அல்லாஹ்'']]
 
''' அல்லாஹ்''' என்ற அரபிச்சொல்லின் வேர்ச்சொல் "அலாஹா". அலாஹா என்றால் வணங்கப்படுவது என பொருள். ஆதலால் "அல்லாஹ்" என்றால் வணக்கத்திற்குத் தகுதியான ஒரே [[இறைவன்]] என்பது அதன் பொருள். [[கடவுள்]], குதா, காட் என்ற பதங்கள் ''வணங்கப்படுபவை'' என்ற பொருளில் அவ்வாறு கூறப்படுகின்றன. அதற்குச் சமமான பொருளை உடையதே [[அரபு மொழி]]யில் உள்ள ''இலாஹ்'' என்ற பதம். வணங்கப்படுகின்ற எதனையும் இலாஹ் என்று கூறலாம். இலாஹ் என்ற பொதுப் பெயருடன் ''அல்'' என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே '''அல்லாஹ்''' என்பதாகும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கூற்று. அல்லாஹ் என்னும் சொல் எந்த ஒரு பாலையும் குறிக்காது. அதை போன்றே பன்மையும் இல்லை. இந்நிலையிலேயே [[திருக்குர்ஆன்]] என்ற [[இஸ்லாம்|இஸ்லாமியர்இசுலாமியர்]]களின் மறை அல்லாஹ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகின்றது. அல்லாஹ் என்ற சொல்லின் மாபெரும் சிறப்பு, அச்சொல்லிலிருந்து இடது பக்கமாக ஒவ்வொரு எழுத்தாக நீக்கினால் மிகுதியாக இருக்கும் சொல் அல்லாஹ் என்ற அர்த்தத்தையே தரும்.
 
'அல்லாஹ்' என்பது ஒரு மொழியின் வார்த்தையாகும். அதுவும் அசல் உச்சரிப்பிலிருந்து மருவி அரபு மக்களிடம் ஏற்றதாழ 4000 வருடங்களாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாகும். அந்த அரபு மக்களின் பெரும்பான்மையானோர் தாங்கள் வணங்கி வந்த மண், மரம், மட்டை, கற்கள், இன்னப்பிற மரணித்த மனிதர்கள், நம்பி இருந்த தேவதைகள் இவைகள் அனைத்தையும் 'இலாஹ்' என்று குறிப்பிட்டு வந்தனர். இலாஹ் என்பது பிறிதொரு சொல்லாகும். இதற்கு 'வணங்கப்படும் கடவுள்' என்பது பொருள். பல வணங்கப்படுபவைகளை உருவாக்கிக் கொண்ட அவர்கள், இவை அனைத்தையும் கடந்து ஒரு பெரிய சக்தி இருக்கின்றது என்றும் அதற்கு அல்லாஹ் என்ற பெயரையும் சூட்டி வந்தார்கள். இவை அனைத்தையும் அந்த மக்களிடம் இஸ்லாம் வெளிப்படுவதற்கு முன்பிருந்த வரலாறாகும். இந்த அல்லாஹ் என்ற பெரிய கடவுள் கொள்கை சித்தாந்தம் அரபு மக்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்ற ஒன்றாகும்.
"https://ta.wikipedia.org/wiki/அல்லாஹ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது