சாகியா, பீகார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Chakia, Bihar" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:27, 29 மே 2020 இல் நிலவும் திருத்தம்

சாகியா (Chakia ) என்பது இந்தியாவின் பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்திலுள்ளா ஒரு முக்கியமான மற்றும் வணிக நகரமாகும். மேலும் இது நகர் ஊராட்சியாகவும் இருக்கிறது. பிரிட்டிசு ஆட்சியின் போது, சம்பாரண் சர்க்கரை ஆலை 1905 இல் நிறுவப்பட்டது. கரும்பு ஆலை 1995 முதல் செயலிழந்துள்ளது. அருகிலுள்ள கிராமங்களுக்கான பல நுழைவாயில்களில் சாகியாவும் ஒன்றாகும். துணிமணிகள் மற்றும் உணவு தானியங்கள் கிராமங்களுக்கு சாகியாவிலிருந்து வர்த்தகம் செய்யப்படுகின்றன. சாகியா இப்போது வேகமாக வளர்ந்து வரும் நகரம் ஆகும்.

நதி

இந்த நகரத்தில் புர்கி கண்டகி என்ற ஒரு நதி உள்ளது. இது கண்டகி ஆற்றின் ஒரு கிளையாறாகும்..

.

புள்ளிவிவரங்கள்

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[1] சாகியாவில் 20,686 மக்கள் தொகையாக இருந்தது. ஆண்கள் 53% மற்றும் பெண்கள் 47% ஆகும். சாகியாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 51% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு; ஆண் கல்வியறிவு 60% மற்றும் பெண் கல்வியறிவு 40%. மக்கள் தொகையில் 20% 6 வயதுக்குட்பட்டவர்கள்.

புத்தமதச் சுற்றுலா

பாட்னாவிலிருந்து 110 கி.மீ தூரத்தில் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் 104 அடி உயரம் (32 மீ) கொண்ட கேசரியா என்ற தாது கோபுரம் உள்ளது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

  1. "Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)". Archived from the original on 2004-06-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகியா,_பீகார்&oldid=2978771" இலிருந்து மீள்விக்கப்பட்டது