"பயனர் பேச்சு:Ravidreams" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,626 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
 
அதற்கு நான் சொன்ன பதில், 25 நவம்பர் 2015 அன்று நிர்வாகி ஒருவரால் இந்த வரி சேர்க்கப்பட்டது. அந்த வரியை இணைத்து சுமார் 3 1/2 வருடங்கள் ஆகின்றது. இதற்கு முன்பும் நீங்கள் இக்கட்டுரையில் பங்களிப்பு செய்துள்ளீர். அப்போதெல்லாம் நீக்க பரிந்துரை செய்யாமல், இப்போது நீக்க சொல்வது ஏன்?? அப்படி நீக்க வேண்டும் என்றால், தன்னிச்சையாக என்னால் முடிவெடுக்க முடியாது, விக்கி சமூகத்தின் ஒப்புதலோடு தான் என்னால் நீக்கம் செய்ய முடியும். நீங்கள் அதன் பேச்சு பக்கத்திற்கு சென்று அந்த வரியை நீக்க பரிந்துரை செய்யுங்கள். பின்பு விக்கி சமூகத்தின் ஒப்புதலோடு நீக்கம் செய்து விடலாம் என்றேன். இதனைப் பற்றி தங்களுடைய கருத்தை தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன் அண்ணா. நன்றி-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 04:09, 28 மே 2020 (UTC)
 
:{{ping|Karthick BE|Gowtham Sampath}} சான்று இல்லை என்று ஒரு தகவலை நீக்கும் முன் சான்று தேவை என்னும் வார்ப்புருவை குறிப்பிட்ட சொல் அல்லது பகுதியின் அருகே சேர்த்து, சான்று சேர்க்க காலம் தரலாம். பேச்சுப் பக்கத்திலும் குறிப்பு இடலாம். பொதுவாக, ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு இப்படிச் செய்வது சாத்தியம் அற்றது என்பதைப் புரிந்து கொள்கிறேன். எனினும், ஒருவர் இது குறித்து முறையீட்டை முன்வைக்கும் போது விடாப்பிடியாக நீக்க வேண்டாம். சான்றினைத் தருவதற்கான காலத்தை அளிக்கவும்.
 
:அவர் [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&diff=2797941&oldid=2797081 இந்த உள்ளடக்கத்தை] நீக்கியது சரியே. முன்பொரு காலத்தில் அச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் அப்படிச் செய்திருந்தாலும் அதனை இப்போது குறிப்பிடத் தேவையில்லை. அது சாதி இழிவாகவே புரிந்து கொள்ளப்படும். ஒருவர் ஒரு முறையீட்டை எப்போது வேண்டுமானாலும் முன்வைக்கலாம். ஏன் முன்பு முறையிடவில்லை என்று கேட்பதில் பொருள் இல்லை. காலத்திற்குக் காலம் நாம் அனைவருமே முதிர்ச்சி அடைகிறோம், கருத்துகளை மாற்றிக் கொள்கிறோம் அல்லவா? நன்றி --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 12:24, 30 மே 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2979275" இருந்து மீள்விக்கப்பட்டது