குழித்துறை மறைமாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி புதிய தகவல்
வரிசை 80:
இப்புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பேரருட்திரு ஜெரோம் தாஸ் வறுவேல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சலேசிய சபையின் சென்னை மறைநிலத்தைச் சார்ந்தவர். [[சலேசிய சபை]]த் துறவியரின் பயிற்சி இல்லத்தின் தலைவராகச் செயல்பட்டுவந்தார். இவர் ஆயராக 2015-ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 24-ம் நாள் கோட்டாறு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார்.
 
=== பணித் துறப்பு ===
== வரலாறு ==
 
ஆயர் ஜெரோம்தாஸ் சில காலமாகவே உடல்நலக் குறைவாக இருந்ததால் திருத்தந்தை பிரான்சிசிடம் மறைமாவட்டப் பொறுப்பிலிருந்து விலகுவதற்காக இசைவு கோரியிருந்தார். அவருடைய கோரிக்கையை ஏற்று, திருத்தந்தை பிரான்சிசு அவர்கள் ஆயருக்கு 2020, ஜூன் 6ஆம் நாள் பணித்துறப்பு வழங்கியதோடு, அதே நேரத்தில் குழித்துறை மறைமாவட்டத்தின் திருத்தூது நிர்வாகியாக (Apostolic Administrator) மதுரை உயர்மறைமாவட்டப் பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்களை 2020, ஜூன் 6ஆம் நாள் நியமித்தார்.
 
== மறைமாவட்ட வரலாறு ==
 
குழித்துறை மறைமாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய கோட்டாறு மறைமாவட்டத்தின் பகுதியாக இருந்தது. கோட்டாறு மறைமாவட்டம் 1930 வரை கொல்லம் மறைமாவட்டத்தின் பகுதியாக இருந்துவந்தது. அப்போது திருவிதாங்கூர் இராச்சியத்தில் தமிழ் பேசப்பட்ட பகுதியாக அது விளங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/குழித்துறை_மறைமாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது