"விபுலாநந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
இவருடைய ஆரம்பக் கல்வி [[கல்முனை]] மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் [[மட்டக்களப்பு]] புனித மைக்கல் கல்லூரியிலும் இடம்பெற்றது. ''கேம்பிரிட்ஜ் சீனியர் (Cambridge Senior)'' சோதனையில் சித்தியடைந்த பின்னர், அவர் [[புனித மைக்கல் கல்லூரி]]யில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் [[கொழும்பு|கொழும்பில்]] உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டையத் தமிழ் இலக்கியத்தைக் கற்றார்.
 
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 1912ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் [[மட்டக்களப்பு]] புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். 1915ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் சேர்ந்து [[விஞ்ஞானம்]] பயின்று 1916இல் அறிவியலில் பட்டயத்தையும் பெற்றார். அத்துடன் [[மதுரை]]த் [[தமிழ்ச் சங்கம்]] நடத்திய தேர்வில் பங்கேற்று [[பண்டிதர்]] பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலாநந்தரே.jgijj
 
=== ஆசிரியப் பணி ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2983766" இருந்து மீள்விக்கப்பட்டது