"விபுலாநந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

398 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி (BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் [[இரசாயனம்|இரசாயன]] உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். மயில்வாகனனாரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக் கொடுத்தன. அதனால் 1917ஆம் ஆண்டு [[யாழ்ப்பாணம்]] [[யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி|சம்பத்தரிசியார் கல்லூரிக்கு]] விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக் கொண்டார். அத்துடன் 1920 ஆம் ஆண்டு [[லண்டன் பல்கலைக்கழகம்]] நடத்திய BSc தேர்வில் தோற்றி சித்தியடைந்தார். மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த [[மானிப்பாய் இந்துக் கல்லூரி]] முகாமையாளரும், [[திருப்புகழ் (அருணகிரிநாதர்)|திருப்புகழ்]], [[சிவப்பிரகாசம்]], [[சிவஞானசித்தியார்]] என்பவற்றுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
 
[[கோணேஸ்வரா இந்துக்கல்லூரி|திருக்கோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில்]], 1925ம் ஆண்டிலிருந்து முகாமையாளராகக் கடமையாற்றிய சுவாமி விபுலாநந்தர் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் தனது செறிவான கவனத்தைச் செலுத்தும் பொருட்டு 1928ல் அதிபர் பதவியையும் ஏற்றுக் கொண்டார். 1926 ஆம் ஆண்டிலிருந்து 1930 வரை திருகோணமலையில் இருந்தபடியே யாழ்ப்பாணம் இராமகிருட்ண மிசன் வைத்தீசுவர வித்தியாலயத்தின் முகாமையாளராகவும் செயற்பட்டார்.
 
=== துறவறம் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2984665" இருந்து மீள்விக்கப்பட்டது