பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 69:
 
-கிருத்திகன்-
 
வினை
 
விழுதிறக்கி பரந்த ஆல்
நிழலிறக்கும் இதமான மாலை
கேலியும் சிரிப்பும் பகிடியுமாய்
கூடி களித்திருந்த பொழுது
 
எல்லை மீறிய கோபங்களால்
நெறி பிறழ்ந்த செய்கைகள்
தொல்லை என உருமாறி
குறி கொண்ட பொழுது
 
சிரிப்பு கோபமாகி கொதிக்க
பகிடி கண்ணீராகி கனக்க
கேலி வேதனையாகி வதைக்கும்
காலமுண்டென எவர் நினைத்தாரோ
 
விவகாரமாய் விடிந்த காலை
வீங்கிய கன்னங்களின் வலியாகி
விழிகளின் அனலேறிய சிவப்பாகி
ஆபத்தை எச்சரிப்பதை உணரவில்லை
 
சாதாரணமாய் கடந்த நாட்கள்
சதி சுமந்த விவரம்
வதந்தியென காற்றாடிய கணங்கள்
வினை வீரியத்தில் மௌனமானது
 
சங்கடமேகம் ஓயாது பொழிய
துயர வெள்ளம் பெருக
ஆருயிர் பல்கலையை நீங்கி
வெட்கி தலைகுனிந்தமை விதி
 
பிரிவின் பாரம் அழுத்த
எனிவரும் காலங்கள் சிறக்க
நேற்றையின் தவறுகள் எண்ணி
மாற்றங்களில் உருமாறிய நனவு
 
புரியாத வாழ்க்கை பாடம்
அறியும் அனுபவம் இது
நாளை வரும் நன்றென
நம்பிக்கை மட்டும் நிச்சயமாய்
 
-அபிநயா-
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது