"பேரரசர் அலெக்சாந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  8 மாதங்களுக்கு முன்
இதை தவிர வேறு எந்த வித கொச்சை குறிப்புகளும் பண்டைய கிரேக்க பண்பாடு பற்றிய குறிப்புகளில் காணப்படவில்லை. ஆனாலும் இந்த வார்த்தைக்கு காமம் கலந்த அர்த்தம் மட்டுமே கொள்ளப்படும் என்கிற கட்டாயமும் இல்லை. ஒருவேளை அலெக்ஸாண்டர் இருபாலீர்ப்பும் கொண்டிருக்க வாய்ப்புண்டு. அது அவரது காலகட்டங்களில் கிரேக்க கலாசாரத்தில் தவறானதுமில்லை
 
மேலும் அவர் தனது அந்திமகாலம் நெருங்கும் தருவாய் வரைக்கும் தனக்கென்று ஒரு வாரிசை உருவாக்கவில்லை. மேலும் அலெக்ஸாண்டரின் பெண்தேடும் படலம் அவரது தந்தையாரின் பெண் தேடலை விட மிக பிரமாண்டமானது என்று ஆக்டேன் கருத்துகளை முன்வைக்கிறார். மனைவியரை தவிர அலெக்ஸாண்டருக்கு நிறைய பெண் தொடர்புகள் உண்டு. மேலும் அலெக்ஸாண்டர் தனக்கென பாரசீக மன்னர்களின் வழக்கத்தின் படி அந்தப்புரங்கள் அமைத்து அதில் எண்ணற்ற பெண்களை நிறைத்திருந்தார். ஆனால் அவர்களிடத்தில் வெகு அரிதாக தான் பொழுதினை கழித்தார். அலெக்ஸாண்டர் இந்த சிற்றின்ப விஷயத்தில் மிகுந்த தன்னடக்கத்துடன் வாழ்ந்தார். இருந்த போதிலும் ப்ளுடர்ச் அலெக்ஸாண்டர் ரோக்ஷனாவிடம் மதிமயங்கியதாக குறிப்பிடுகிறார். அவளிடத்தில் மட்டும் காதலை கொடுத்ததாகவும் குடிப்பிடுகிறார்குறிப்பிடுகிறார். கிரீனும் இதையே வழிமொழிகிறார், ''அலெக்ஸாண்டர் தன்னை தத்தெடுத்த காரியாவின் அடா மற்றும் அலெக்ஸாண்டரின் மரணசெய்தி கேட்டதும் துக்கத்தில் உயிர்நீத்த டாரியஸின் தாயார் சிஸிகம்பிஸ் முதற்கொண்டு பல பெண்களுடன் நட்பு கொண்டிருந்தார்'' என்று குறிப்பிடுகிறார்.
 
==அலெக்சாந்தரின் படைத்தலைவர்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2990145" இருந்து மீள்விக்கப்பட்டது