"கோட்டுருவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,070 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
 
''G'' என்ற கண்ணிகளை அனுமதிக்கும் திசையுள்ள எளிய கோட்டுருவின் விளிம்புகள், ''G'' இன் முனைகளின் மீது "அடுத்தமையும் உறவை"த் தூண்டுகின்றன. ஒவ்வொரு விளிம்பு {{nowrap|{''x'', ''y''}} இன் இறுதிப்புள்ளிகள் ''x'' , ''y'' இரண்டும் அடுத்தடுத்த முனைகளாகும்; இது குறியீட்டில் {{nowrap|''x'' ~ ''y''}} என எழுதப்படுகிறது.
 
== கோட்டுரு வரைதல் ==
கோட்டுருக்களின் முனைகளை புள்ளிகள் அல்லது சிறு வட்டங்களைக் கொண்டும் விளிபம்புகளை இணைப்புள்ள முனைகளை இணைக்கும் கோடுகளைக் கொண்டும் வரைந்து ஒரு கோட்டுருவானது காட்சிப்படுத்தப்படுகிறது. கோட்டுரு திசையுள்ளதாக இருந்தால் அம்புக்குறிகள் மூலம் திசைகள் காட்டப்படுகின்றன.
 
ஒரு கோட்டுருவை பலவழிகளில் வரைந்து காட்சிப்படுத்த முடியுமென்பதால், கோட்டுருவின் வரைபடத்தை காட்சியற்ற நுண்புல அமைப்பான அக்கோட்டுருவுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஒரு கோட்டுருவைப் பொறுத்தவரை, எந்தெந்த முனைகள் எந்தெந்த முனைகளோடு எத்தனை விளிம்புகளால் இணைப்புடையவை என்பதுதான் முக்கியமானதே தவிர அதன் வரைபடமல்ல. பெரும்பாலும் நடைமுறையில் இரு வரைபடங்கள் ஒரே கோட்டுருவுக்கானவையா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது கடினமானது. கோட்டுருக்களின் அமைவு களங்களைப் பொறுத்து சில வரைமுறைகள் மற்றவற்றைவிடச் சிறந்தவையாகவும் புரிந்துகொள்ள எளிதானவையாகவும் இருக்கலாம்.
 
வில்லியம். தா. தட்டு (W.T. Tutte) என்ற பிரித்தானியக் கணிதவியலாரின் முன்னோடி ஆய்வுகள் கோட்டுரு வரைதலுக்கு மிகவும் உதவியாகவுள்ளன. நேரியல் இயற்கணித முறைகளைக் கொண்டு கோட்டுரு வரைதலை அவர் அறிமுகப்படுத்தினார். தளமாக இல்லாத பிற மேற்பரப்புகளிலும் கோட்டுரு வரைதலுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுகின்றன.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2992735" இருந்து மீள்விக்கப்பட்டது