"வார்லி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,256 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
==வார்லி ஓவியம்==
யசோதர தால்மிய என்பவரின் புத்தகமான ''வார்லிகளின் ஓவிய உலகம்'' என்ற நூலில் வார்லி ஓவியக் கலை கி.மு. இரண்டாயிரத்து ஐநூறு முதல் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவிய பாரம்பரியத்தின் தொடர்ச்சியைக் கொண்டது, தொன்மையுடையது என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஓவியக் கலைக்கும் மத்தியப் பிரதேசத்தின் பீம்பெத்கா பகுதில் கி.மு.500 அல்லது 3000 ஆண்டுகளைச் சேர்ந்தாகக் கருதப்படும் குகை ஓவியங்களுக்கும் தொடர்பு உள்ளது. இந்த இரு பகுதிகளில் ஓவியக் கலையும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. <span class="cx-segment" data-segmentid="20"></span>
இந்த வார்லி ஓவியங்கள் எளிய அடிப்படை வடிவங்களை கொண்டே வரையப்படுகின்றன. அதாவது வட்டம், முக்கோணம், சதுரம் போன்ற வடிவங்களைக் கொண்டே தாங்கள் காணும் இயற்கை காட்சிகளை வரைகின்றனர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8690411.ece | title=பேசும் பொற்சித்திரங்கள் | publisher=தி இந்து (தமிழ்) | date=2016 -சூன் 4 | accessdate=4 சூன் 2016}}</ref> எடுத்துக் காட்டாக வட்ட வடிவத்தை சூரியன், சந்திரன் ஆகியவற்றை வரையவும், முக்கோணத்தை மலைகள், கூரான மரங்கள் போன்ற வடிவங்களை வரையவும், சதுர வடிவம் மட்டுமே ஒரு வித்தியாச தருக்கத்தை கருத்தை கூறுவதாக உள்ளது. இது ஒரு மனிதன் கண்டுபிடிப்பை வெளிபடுத்துவதாக மற்றும் அடைக்கப் பட்ட ஒரு புனிதத் தன்மையுடைய சதுர நிலம் துண்டு நிலம் ச போன்றவற்றை குறிக்கும்வகையில் வரைகின்றனர்.<ref>{{வார்ப்புரு:Cite book|last1=Tribhuwan|first1=Robin D.|last2=Finkenauer|first2=Maike|title=Threads Together: A Comparative Study of Tribal and Pre-historic Rock Paintings|url=http://books.google.co.in/books?id=lBXdIQVeIS0C&pg=PA13&dq=Dev+Chowk&hl=en&ei=9f3CTKHMAou4vgO_ncDOCA&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CCwQ6AEwAQ#v=onepage&q=Dev%20Chowk&f=false|year=2003|publisher=Discovery Publishing House|location=Delhi|isbn=81-7141-644-6}}</ref> அதனால் எல்லா ஓவியங்களுக்கும் மையக் கருத்து "சௌக்" அல்லது "சௌகாட்" என்று அறியப்படும் சதுரம் ஆகும். இவைகள் முக்கியமாக "தேவ் சௌக்" அல்லது "லக்னாசௌக்" என்று இரு வகைப்படும். தேவ்சௌக்கின் உள்ளே நாம் வளத்திற்கு அடையாளமான தாய் கடவுளான பலகாட்டாவைக் காணலாம். குறிப்பாக ஆண் கடவுள்கள் வார்லி ஓவியத்தில் காணப்படுவது வழக்கத்திற்கு மாறானது அவைகள் மனித உரு எடுத்த ஆவிகளாக சித்தரிக்கப் படுகின்றன. வழக்கமாக இவ்வகை ஓவியங்களில் மையக் கருத்தாக காணப்படும் காட்சிகளாவன வேட்டையாடுதல், மீன்பிடித்தலும் வேளாண்மையும், திருவிழாக்களும் நடனங்களும் மரங்களும் விலங்குகளும் ஆகும். மனிதர்களும் விலங்குகளும் இரண்டு முக்கோணங்களை அவற்றின் நுனியில் இணைத்து வரையப்படுவதன் மூலம் அடையாளப் படுத்தப் படுகிறது. மேலே உள்ள முக்கோணம் உடம்பின் மேல் பாகத்தையும் கீழே உள்ள முக்கோணம் வயிற்று பாகத்தையும் குறிக்கும். இவைகளின் நிலையற்ற சமநிலை இவ்வுலகின் சமநிலை, கணவன் மனைவிக்கான இடையேயுள்ள சமநிலை, உடல்களை அசைத்து மகிழ்ச்சியூட்டுகிற நிலையினால் வரக்கூடிய பயன் ஆகியவற்றை குறிப்பாக வெளிப்படுத்துகிறது. <ref>{{cite web|url=http://thecraftyangels.com/a-complete-warli-painting-tutorial-guide/|title=A Complete Warli painting Tutorial Guide|date=2015-04-22|publisher=The Crafty Angels|author=|accessdate=2016-01-21}}</ref>
இவ்வாறு உள்ள சமநிலை பட ஓவியங்கள் வளர்ச்சியுறாத கலைகள் மூலம் பொருத்தப் படுகிறது. பொதுவாக இவ்வகை ஓவியங்கள் குடிசைகளின் சுவர்களில் வரையப் படுகிறது. வார்லி பழங்குடியினர் தங்கள் வீட்டுச் சுவர் கட்டுமானத்துக்கு மரக்கிளைகள், மாட்டுச் சாணம் மற்றும் மண்ணைக் குழைத்துப் பூசி பயன்படுத்துகிறார்கள். இவர்களின் வீட்டின் உட்சுவர்களில் காவி வண்ணம் பூசுகிறார்கள். இது ஒரு சிவப்பு பின்புலத்தை கொடுக்கிறது. இந்தக் காவி பின்புலத்தில்தான் ஓவியங்கள் வரையப்படுகின்றன. காவிப் பின்புலத்தில் தெளிவாகத் தெரிவதற்காக வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள். வெள்ளை நிறத்துக்கு அரிசி மாவைத் தண்ணீரில் குழைத்து பிசினோடு சேர்த்து பயன்படுத்துகிறார்கள். மூங்கில் குச்சியின் நுனியை நைத்து அதை வர்ணம் இடும் தூரிகையாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த ஓவியங்கள் பெரும்பாலும் திருமணம், அறுவடைவிழா போன்றவற்றிற்காக வீட்டை அலங்கரிக்கும் விதமாக வரைகின்றனர். இவற்றை வரைந்து 1970வரை பாதுகாத்தவர்கள் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது. 1970க்கு பிறகு வார்லி ஓவியங்கள் புகழ் பெறத்துவங்கின. வார்லி ஓவியம் கோகோ-கோலா விளம்பர பிரச்சாரமான 'தீபாவளியே வீட்டிற்கு வா' என்ற விளம்பரத்தில் 2010 இல் இடம்பெற்றது. இது மேற்கு இந்தியாவின் வார்லி பழங்குடிகளின் தனித்துவமான வாழ்க்கையின் கலைக்கு ஒரு அங்கீகாரமாக கருதப்படுகிறது. வார்லி ஓவியக் கலை இன்றைக்கு சுவர் ஓவியம் என்ற நிலையில் இருந்து ஆடை வடிவமைப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சேலை, சுடிதார் போன்றவற்றில் வார்லி ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் திரைச் சீலைகள், படுக்கை விரிப்புகள் போன்றவையும் வார்லி ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
==மேற்கோள்கள்==
{{reflist}}
352

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2992772" இருந்து மீள்விக்கப்பட்டது