சுபாஷ் சந்திர போஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 49:
ஐந்து வயதான போது, கட்டாக்கிலுள்ள 'பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளி'யில் இணைந்த சுபாஷ், ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார். பின்னர், தன் உயர் கல்வியை '[[கொல்கத்தா]] ரேவன்ஷா கல்லூரி'யில் தொடங்கிய சந்திர போஸ், 1913 ஆம் ஆண்டுத் தேர்வில் [[கொல்கத்தா]] பல்கலைக்கழக எல்லைக்குள் 2 ஆவது மாணவராகத் தேறினார். இவரது தாயார், மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும், சிறு வயது முதலே [[விவேகானந்தர்]] போன்ற ஆன்மிக பெரியோர்களின்பால் ஈடுபாடுடையவராயும், அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராயும் இருந்தார். இதனால் ஞான மார்க்கத்தின்பால் ஈடுபாடு கொண்டார் ; துறவறத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். எதிலுமே பற்றற்று இருந்ததுடன், தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ், தன் ஞானவழிக்கான ஆசானைத் தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார்.
 
அப்போது, வாரணாசியில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி பிரம்மானந்தரைச் சந்தித்தார். இவருக்கு, சுபாஷின் தந்தையையும், குடும்பத்தையும் நன்கு தெரியும். இந்த சந்திப்பு குறித்து, பின்னாளில் தனது நண்பரான திலீப் குமார் ராயிடம், ''"யாருக்கெல்லாம் சுவாமி பிரம்மானந்தரது அருள் கிடைக்கிறதோ, அவர்கள் வாழ்வே மாறிவிடுகிறது ; எனக்கும் அவரது அருளில் ஒரு சிறு துளி கிட்டியது ; அதனால் தான், என் வாழ்க்கையைத் தேசத்திற்கு அர்ப்பணித்து, அதன் பலனைப் பெற விரும்புகிறேன் ; இன்னொன்றும் சொல்லி விடுகிறேன் : அதே ராக்கால் மகராஜ் ([[சுவாமி பிரம்மானந்தர்]]), வாரணாசியிலிருந்து என்னை வரச் சொல்லி, என்னைத் தேசத்துக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்,"'' என்று குறிப்பிட்டுள்ளார்.<ref>சுவாமிஜியும் நேதாஜியும்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 36</ref> தன் மானசீக ஆசானாக, விவேகானந்தரையே ஏற்று வீடு திரும்பினார்.<ref>{{cite web|url=http://www.venkkayam.com/2012/05/01.html|title=Package tracking aliexpress, amazon, ebay.|work=www.venkkayam.com}}</ref>
 
துறவறப் பாதையில் செல்ல விரும்பிய சுபாஸ் சந்திரபோஸ், ஞான மார்க்கத்திற்கு ஏற்ற குரு கிடைக்காததால், தந்தையாரின் வேண்டுகோளிற்கு இணங்கி 1915 ஆம் ஆண்டு [[கொல்கத்தா]] பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். அக்காலத்தில் ஆங்கில இனவெறி மிக்க வரலாற்று ஆசிரியரான சி. எஃப். ஓட்டன் என்ற ஆசிரியர் அங்கு கற்பித்தார். அவர் கல்வி கற்பிக்கும் நேரங்களில், பெரும்பாலும் இந்தியர்களை அவமதித்து வந்தார். இவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, சுபாஸ் சந்திர போஸும் அவரது நண்பர்களும், கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன், இரண்டு ஆண்டுகள் வேறெந்த கல்லூரிகளிலும் படிப்பை தொடரமுடியாது செய்யப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/சுபாஷ்_சந்திர_போஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது