முதலாம் சோமேசுவரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
 
==சோழர்களுடனான போர்கள்==
வரலாற்றாசிரியர் காமத்தின் கூற்றின்படி, தனது முடிசூட்டுக்குப் பிறகு, விரைவில் முதலாம் சோமேசுவரன் வேங்கி விவகாரங்களில் தலையிட்டு, அப்பகுதியின் மீது படையெடுத்தான். ஆனால் சோழருக்கு எதிரான இப்போரில் [[இராஜாதிராஜ சோழன்|இராஜாதிராஜ சோழனிடம்]] அமராவதியில் தோல்வியடைந்தான். வரலாற்றாசிரியர் சாஸ்திரியின் கூற்றின்படி, இராஜாதிராஜ சோழன் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள தன்னடா ("தான்யகட்டா") போரில் முதலாம் சோமேசுவரனைத் தோற்கடித்தான். மேலைச் சாளுக்கிய படைகள் கிருஷ்ணா நதியைத் தாண்டி பின்வாங்கின. மேலும் கொல்லிப்பாக்கிக் கோட்டை (குல்பார்க்) தரைமட்டமாக்கப்பட்டது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து கம்பிலி மற்றும் புந்தர் ஆகியவை சோழர்களால் வெற்றிகொள்ளப்பட்டன. வரலாற்றாசிரியர்களின் சோப்ரா மற்றும் பலரின் கருத்துப்படி கம்பிலியை வெற்றிகொண்ட விவரங்கள் மணிமங்கலம் சாசனங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. சோழர்கள் தங்களது வெற்றித்தூணை யட்டகிரியில் (தற்கால [[யாத்கிர் மாவட்டம்]] யாத்கிர் மாவட்டத்தில் உள்ள யத்திகர்) நிறுவினர். இறுதியாக சோழர்கள் கி.பி.1045 இல் சாளுக்கிய தலைநகரான [[கல்யாணி]]யைச் சூறையாடினர். பிறகு வெற்றிகொள்ளப்பட்ட எதிரியின் தலைநகரான கல்யாணி நகரில் இராஜாதிராஜ சோழன் வீராபிசேகம் செய்துகொண்டான். மேலும் விஜயராஜேந்திரன் என்ற பட்டமும் சூடினான். எனினும், சாஸ்திரி மற்றும் சென் கூற்றின்படி, வியக்கும் வகையில் முதலாம் சோமேசுவரன் இழந்த தன் செல்வாக்கை மீட்டு, கி.பி.1050 காலகட்டத்தில் வேங்கியின் மீதான தனது ஆதிக்கத்தை கொண்டுவந்தது மட்டுமல்லாது, இவனது செல்வாக்கு கலிங்கம்வரை (இன்றைய ஒரிசா ) நீண்டது. மேலும் முதலாம் சோமேசுவரன் சோழப் பேரரசின் உள்பகுதியான காஞ்சிபுரத்திலேயேகாஞ்சிபுரம் வரை சோழர்கள்மீது எதிர்தொடுத்த தாக்குதல் தொடுத்தான்வலிமைவாய்ந்த சோழர்களால் முறியடிக்கப்பட்டது.<ref name="capital"/><ref name="bank"/><ref name="mani">Chopra, Ravindran and Subrahmanyam (2003), p.138</ref><ref name="zenith"/>
 
சில காலம் சோழர்களின் செல்வாக்கு வேங்கி, கலிங்கம் ஆகியவற்றின் மீது சற்று குறைந்திருந்தது. என்றாலும், கி.பி1054இல் சோழர்கள் படையெடுத்து சாளுக்கியருக்குப் பதிலளித்தனர். கொப்பள் (கொப்பம்) என்ற இடத்தில் நடந்த [[கொப்பம் போர்|கொப்பம் போரில்]] சோழ மன்னன் [[இராஜாதிராஜ சோழன்]] கொல்லப்பட்டான். இப்போரில் முதலாம் சோமேசுவரன் தனது சகோதரன் ஜெயசிம்மனை இழக்க வேண்டியிருந்தது. சோழ இளவரசன் [[இரண்டாம் இராஜேந்திர சோழன்|இரண்டாம் இராஜேந்திரன்]] (இராஜாதிராஜனின் தம்பி) மன்னனாக முடிசூடி மீண்டும் சாளுக்கிய படைகளை துரத்தியடித்தான். சாஸ்திரி அவர்கள் கூற்றின்படி சோழர்களின் தோல்வியை வெற்றியாக இரண்டாம் இராஜேந்திர சோழன் மாற்றினான். தனது வெற்றியின் சின்னமாக ஒரு வெற்றித் தூணை கொல்லாபுராவில் (தற்போதைய [[கோலாப்பூர்]] ) நிறுவி தனது தலைநகரான கங்கை கொண்ட சோழபுரம் திரும்பினான். சாளுக்கிய ராணிகள் சத்யாவதி, சங்கப்பாய் ஆகியோர் உட்பட சாளுக்கியரிடம் கைப்பற்றிய மிகுதியான செல்வங்களையும் கொண்டு வந்தான். கி.பி.1059லும் மோதல்கள் ஏற்பட்டன. இரண்டாம் ராஜேந்திர சோழனால் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் துங்கபத்ரா நதிக்கரையில் தோற்கடிக்கப்பட்டது. முதலாம் சோமேசுவன் இந்த வெற்றியைக் கொண்டாட அண்ணிகேரி (தற்போதைய [[தார்வாட் மாவட்டம்]]) என்ற இடத்தில் ஒரு கோயில் கட்டினான். எனினும், சென் கூற்றின்படி, கி.பி.1059இல் துங்கபத்ரை நதிக்கரையில் முடக்காறு போரில், முதலாம் சோமேசுவரன் மற்றொரு தோல்வியை சந்தித்தான்.<ref name="capital"/><ref name="bank">Sastri (1955), pp.168-169</ref><ref name="mani"/><ref name="zenith"/>
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_சோமேசுவரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது