"கொஞ்சும் சலங்கை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,416 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(→‎உசாத்துணை: Added Archive url)
 
}}
'''கொஞ்சும் சலங்கை''' [[1962]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எம். வி. ராமன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஜெமினி கணேசன்]], [[சாவித்திரி]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
 
== பாடல்கள் ==
[[எஸ். எம். சுப்பையா நாயுடு]] இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் பெரும்பாலும் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டிருந்தன. [[எஸ். ஜானகி]] பாடிய ''சிங்கார வேலனே தேவா'' என்ற பாடல் மிகப் புகழ் பெற்றது. இப்பாடலுக்கு நாதஸ்வர இசை துணை இசையாகக் கையாளப்பட்டிருந்தது. [[காருக்குறிச்சி அருணாசலம்]] நாதஸ்வர இசை வழங்கியிருந்தார். பாடல் பம்பாயிலும், நாதஸ்வர இசை சென்னையிலும் பதிவாகி, பின் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்தப் பாடல் ஆபேரி ராகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பாடலை [[கு. மா. பாலசுப்பிரமணியம்]] இயற்றியிருந்தார்.
 
''ஒருமையுடன்'' என்று தொடங்கும் வள்ளலார் பாடல் பிலஹரி ராகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
 
ராகமாலிகையாக உருவாக்கப்பட்டிருந்த ''காண கண் கோடி வேண்டும்'' என்ற வி. சீதாராமன் இயற்றிய பாடலுக்கு [[குமாரி கமலா]] நடனமாடியிருந்தார். இந்தப் பாடல் காட்சி சிதம்பரம், ஸ்ரீரங்கம், மதுரை, திருச்செந்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தலங்களில் படமாக்கப்பட்டிருந்தது. படம் வெளிவர முன்னர் வெளியிடப்பட்ட இசைத்தட்டில் ஸ்வரங்களுடன் சேர்த்து பாடல் முழுமையாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தது. பாடலின் கால அளவு 6:14 நிமிடங்களாக இருந்தது. ஆனால் படத்தில் ஸ்வரங்கள் பகுதிகளை நீக்கிவிட்டார்கள். ஆகவே படத்தில் பாடலின் கால அளவு 5:22 நிமிடங்களாக மட்டுமே இருந்தது. முழுமையான பாடலுக்கான இணைப்பு வெளி இணைப்புகள் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
 
== உசாத்துணை ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.imdb.com/title/tt0259387/ கொஞ்சும் சலங்கை]
* {{youtube|qeg75zS5I9I|காண கண் கோடி வேண்டும்}} - முழுமையான இசைத்தட்டுப் பாடல்
 
[[பகுப்பு:1962 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2995179" இருந்து மீள்விக்கப்பட்டது