பாபிலோனிய எண்ணுருக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
 
இந்த எண்மான முறையில் 59 சுழியல்லாத தனி எண்களைக் குறிப்பதற்காக, [[File:Babylonian 1.svg|20px]] என்பதை ஒற்றை எண்களைக் குறிக்கவும் [[File:Babylonian 1.svg|20px]] [[File:Babylonian 10.svg|20px]] என்பதைப் பத்துகளைக் குறிக்கவும் என இரு குறியீடுகள் மட்டும் பயன்பட்டுள்ளன. இந்தக் குறியீடுகளையும் அவற்றின் இட மதிப்புகளையும் இணைத்து (உரோம எண்குறி முறைபோல) ஓர் எண்ணை உருவாக்கியுள்ளனர்; எடுத்துகாட்டாக, 23 என்ற எண்ணைக் குறிக்க, [[File:Babylonian 20.svg|20px]][[File:Babylonian 3.svg|20px]] என்பதைப் பயன்படுத்தியுள்ளனர் (கீழுள்ள பட்டியலைப் பார்க்கவும்). தற்காலச் சுழியைக் குறிக்க ஒரு வெற்று இடைவெளியைப் பயன்படுத்தியுள்ளனர். பாபிலோனியர்கள் பின்னர் சுழியைக் குறிக்க இந்த வெற்று இடைவெளிக்கு மாற்றாக,புதிய குறியை உருவாக்கியுள்ளனர். . பாபிலோனிய எண்மானத்தில் தற்காலப் பதின்மப் புள்ளியைப் போன்ற பகவுப் (பின்னப்) புள்ளி இல்லாததால், ஒற்றை என்களின் இட மதிப்பைக் குறிப்பிட்ட சூழலைச் சார்ந்தே உய்த்தறிதல் வேண்டும்: [[File:Babylonian 20.svg|20px]][[File:Babylonian 3.svg|20px]] என்பது 23 அல்லது 23×60 அல்லது 23×60×60 அல்லது 23/60, போன்றவற்றைக் குறிக்கலாம்.
 
பாபிலோனிய முறை எண்களைக் குறிக்க அகப் பதின்மத்தைப் பயன்படுத்தியுள்ளன; என்றாலும், இது பதின்மான, அறுமானக் கலப்புப் பகுப்பு முறையைப் பின்பற்றவில்லை. பத்து அடிமானம் பெரிய எண்களைக் குறிக்கும் தேவைக்கான ஏந்தாக மட்டுமே பயன்பட்டுள்ளது. இதன் பதின்ம எண்சரம்தெளிவாக அறுபதின்ம அடிமான முறையையே இடமதிப்பாகப் பெற்றிருந்தது. இந்த எண்சரக் கணக்கீடுகளும் அறுபதின்ம முறை சார்ந்தே அமைந்தன.
 
இந்த அறுபதின்ம முறை கோணங்களை அளக்க இன்றும் பயன்பாட்டில் உள்ளது. வட்டத்துக்கு 360 கோணப் பாகைகளையும் சமபக்க முக்கோணத்துக்கு 60 கோணப் பாகைகளையும் முக்கோண அளவியலில் பாகை, பாகைத்துளி, பாகைநொடிகளையும் பயன்படுத்துகிறோம். காலம் அளக்கவும் இம்முறை பயன்படுகிறது. என்றாலும், இவையிரண்டும் கலப்புப் பகுப்பு முறையையே பின்பற்றுகின்றன என்பது குறிப்பிட்த்தக்கது. <ref>http://www.scientificamerican.com/article/experts-time-division-days-hours-minutes/</ref>
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/பாபிலோனிய_எண்ணுருக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது