அரசர்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 118.201.184.90ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 22:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9,184 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>Rural - Rural - Pudukkottai District;Aranthangi Taluk;ArasarkulamMELPATHI, Keelpathi Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 4,355 ஆண்கள், 4,829 பெண்கள் ஆவார்கள். அரசர்குளம் மக்களின் சராசரி கல்வியறிவு 75.12% ஆகும்.திருச்சிராப்பள்ளி விமான நிலையம் இங்கிருந்து 90 கி.மீ. தூரத்தில் உள்ளது.
 
தேவர்கள்,முஸ்லிம்கள்,வலையர் அதிகமாக வாழும் இந்த கிராமத்தின் பிரதான தொழில் விவசாயமாகும்.இக்கிராமத்திலிருந்து பெரும்பான்மையான பேர்கள் [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] மற்றும் அரபு நாடுகளில் வேலைக்காக சென்றுள்ளனர். இங்கு ராக்கம்மாள் கோவில்,இரண்டு முத்துமாரியம்மன் கோவில்,ஐயனார் கோவில்,கனகாம்பாள் சிவன் கோயில்,வாழைப்பிள்ளையார் கோவில்,முணிகோவில்,பதிணெட்டாம்படி கருப்பர் கோவில்,மற்றும் மசூதிகள் இருப்பது வரலாற்று சிறப்பு [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]யின் கீழும், [[ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)|ஆலங்குடி சட்டமன்ற தொகுதியின் கீழும்]] இந்த ஊர் வருகிறது. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி போன்றவைகள் அரசு சார்பிலும், அல்ஹிதாயா அரபி பள்ளி ஜமாஅத் சார்பிலும் இயங்கிவருகிறது.
 
ஒன்றிய அரசு நிறுவனங்களான பாரத ஸ்டேட் பாங்கும்,இந்தியன் ஓவர்சீஸ் பேங்கும்,அஞ்சல் நிலையம் , தொலைபேசி இணைப்பகமும் இங்குள்ளது.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு நூலகமும், தவ்ஹீத் ஜமாஅத் நூலகம் போன்ற தனியார் நூலகங்களும் இயங்கி வருகிறது.
 
பகுதி நேரமாக இயங்கக்கூடிய ஒரு அரசு மருத்துவமனையும் உள்ளது.இந்த ஊர், நாகுடி காவல் நிலைய எல்லைக்குள்ளும்,[[அறந்தாங்கி]] நீதிமன்ற எல்லைக்குள்ளும் வருகிறது.
தாணான்மை நாட்டு வணங்காமுடி வழுவாத தேவர்கள் சரித்திரம்
 
அறந்தாங்கிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையில் உள்ள அரசர்குளம்,குளமங்கலம், கீரமங்கலம்,நகரம்,சேந்தங்குடி..
 
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி"
-விறற்படை மறவர் வெஞ்சமர் காணின் மறப்போர்ச் செம்பியன்."திருவீழ் மார்பின் தென்னவன்மறவன்"(அகம்:13:5)அச்சுதராய அப்யுகதம் கூறும் தென்காசி பாண்டியன் மானபூசனன் என்னும் மறவனை.
தாணான்மை நாடு
அரசர்குளம்,குலமங்களம்,கீரமங்கலம்,
சேந்தங்குடி,நகரம்... வணங்காமுடி வழுவாத தேவர்கள் சரித்திரம்
 
பொன் விழையும் தஞ்சை சீமை அதில் புகழ் விளங்கிய வரலாறுகள் பல உள்ளன. அதில் உண்டான பேரரசுகளும் சிற்றரசுகளும் காவிரித் தமிழன்னைக்கு அழகு சேர்த்த செல்வங்களாக உள்ளன. அதில் சோழப் பேரரசர்களின் புகழ் வீழ்ந்த பின் பல அந்நியர்களின் கையில் வீழ்ந்த தஞ்சை மன்னில் தமிழ் வளர்த்த தொல்குடி சிற்றரசர்களின் புகழ்கள் காலத்தில் மறந்திரா வண்ணம் அறந்தாங்கிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையில் உள்ள அரசர்குளம், கீரமங்கலம்,நகரம்,சேந்தங்குடி போன்ற பகுதிகளில் தமிழ் வளர்த்து பேராண்மையுடன் வாழ்ந்த தமிழ் சிற்றரசர்களான வழுவாட்டி தேவர்களின் சரித்தரத்தை பார்ப்போம். இந்நூல் அந்த வழுவாத தேவர்கள் சரித்திரத்தை அவர்களின் சந்ததியினர் வெளியிட்ட நூலின் மூலத்துடன் அவர்களின் ஒப்புதலாலும் ஊக்குவித்தலால் இக்கட்டுரையை சமர்பிக்கிரோம்.
 
தாணான்மை நாடும் வழுவாத தேவர்களும்:
 
தாணான்மை என்ற சொல்லிலே எவருக்கும் அடிபணியா "தாளான்மை" என்ற சிறப்புடன் தன்னகத்தே கொண்ட தன்னரசு நாடு என்பது விளங்கும். எனவே இச்சிற்றரசர்கள் சுயகவுரத்திற்கும் வீரத்திற்கும் பேர் போன வீர மக்களாகும். அதனாலே தங்கள் நாட்டுக்கு தாணான்மை நாடு என பெயர் வைத்துள்ளனர்.இதற்க்கு அரசர்குளம், குலமங்கலம்,கீரமங்கலம்,நகரம்,சேந்தன்குடி இன்னும் சில பகுதிகளை உள்ளடக்கியது. இந்த தாணான்மை நாட்டுக்கு "சேந்தங்குடி" தலைநகரமாகும். இன்று அது சிற்றூராகினும் முன்னாளில் அது சிறப்புர விளங்கியுள்ளது. இதனாலே நகரம் என்னும் சிற்றூரும் அருகே உள்ளது.
 
வழுவாடி தேவர்கள்:
 
இந்த சிற்றரசர்களின் பட்டம் வழுவாட்டி தேவர்கள். வழுவாடி என்னும் பெயர் பாண்டிய மண்ணன் வழுதி என்னும் பெயருடனும் மற்றும் வீரத்தை குறிக்கும் பெயராக இருப்பினும். இவர்களின் முழுப்பட்டமான "வணங்காமுடி வழுவாட்டி தேவர்" என்னும் பெயரிலே அதற்க்கு விளக்கம் உள்ளது. அதாவது "வணங்காத முடி புணைந்து தன் தரித்த முடியை எக்காலகட்டத்திலும் வழுவாத பண்பை கொண்டவர்கள்". எனவே நீதி,செங்கோல் இவைகள் தன்னை விட்டு வழுவாமல் ஆட்சிபுரிந்தவர்கள் ஆதலில் இவர்கள் "வணங்காமுடி வழுவாத தேவர்கள்" என்ற பெயரே காலபோக்கில் "வணங்காமுடி வழுவாட்டி தேவர்கள்" என்ற பெயரானது.அத்தகை வீர மைந்தர்களின் பூர்வ வரலாறை பார்ப்போமாக.
 
பூர்வீகம்:
 
இவர்களின் வரலாறு சில ஒலை சுவடிகள் மூலமாகவும் செவி வழிகதைகளினாலும் மேலும் 1951-ல் புள்ளான்விடுதி மதுரகவி நடேசகோனார் அவர்கள் எழுதிய "விஜயாந்தகளிப்பு" என்ற நூலையும், சேந்தங்குடி செந்தமிழ் புலவர் து.அ.சுப்புராம் அவர்களால் எழுதப்பெற்று 1983-இல் வெளிவந்த "சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாறு" என்ற நூலையும் இன்னும் சிலரின் வரலாற்று குறிப்புகளையும் ஆய்வு செய்து இன்நூலை எழுதியுள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
இவர்கள் பாண்டிய நாட்டை பூர்வீகமாக கொண்ட குடிமக்களாகும். அவர்கள் தொடக்கத்தில் மதுரைப்பக்கத்திலிருந்து இங்கு வந்து சேர்ந்தவர்கள். அவர்கள் அவ்வாறு வந்தவர்கள் என்பதை பாளையத்தாரோடு நெருங்கிய உறவும் தொடர்பும் கொண்டிருந்த ஒரு குறிப்பில்
 
"ஆதியில் வீரத்தேவன்,ஆவாத்தேவன்,
ஆண்டித்தேவன்,கூத்தா தேவன், என்ற நான்கு
சகோதரர்கள் மதுரைக்கு மேற்கே உள்ள சிவகிரி வடமலையிலிருந்து பலவான்
குடிக்கு கீழ்புறமாய் உள்ள வன்னியன்
சூரைக்குடி" யிலும் கோனாப்பட்டுக்கு சமீபமாய்
உள்ள குருந்தம்பாரையிலும்
வந்து சிற்சில காலம் தங்கி கடைசியாக
இந்த குளமங்கலம் வந்து குடியேறினர்"
என்று அரண்மனை வழுவாட்டி வாசகத்திலிருந்து
படித்து இருக்கிரேன், ஆவாத்தேவன் வழி வந்தோர் என் மூதாதையர்"
என்றும் எழுதியுள்ளார்" -- புலவர் :தா.ச. இராமசாமி.
அந்த நால்வரும் ,குருந்தன்பாறையில் தங்கி இருந்த போது அங்கிருந்து இடம்பெயர்ந்த காரணத்திற்கு பல சமூகத்திலும் புழங்கும் "மகட்கொடை மறுப்பு கதையை" "மன்னன் பெண் கேட்டு அதை ம்றுத்து" வந்தோம் என கூறுவது அவர்கள் கவுரவத்தை உயர்வாக எண்ண தோன்றும் ஆதலில் அந்த வழக்கத்தை தொன்று தொட்டு பல்வேறு சமூகமும் கூறும் காரண கதையாகும்.
இப்படி வந்தவர்கள் தங்கிய இடம் "அரசர்குளம்" .அங்கு அரன்மனையில் தஞ்சம் அடைந்தனர். இவர்களின் வீர வரலாற்றை கேட்ட அரசர்குளம் அரசன். அவர்களுக்கு அடைக்கலம் தந்து அரண்மனையில் பாதுகாவலராக பணியில் அமர்த்தினான்.
 
இப்படி வந்த வீரத்தேவன் என்பவரும் அவரி
 
எனவே அரசர்குளம் என்பது பாலவநத்தம் ஜமீன். அரசன் ஒருமுறை வேட்டை ஆடுவதற்காக பாலைவனம் சுனையக்காட்டு பகுதிக்கு சென்றிருந்தார் அப்போது பட்டுக்கோட்டைப் பகுதியயை ஆண்ட பட்டு மழவராயன் வீராச்சாமி மழவராயன் ஆவுடையார் கோவில் தேர்த்திருவிழா காண சென்றபோது அரசன் வேட்டைக்கு சென்றுள்ளான் என்பதை அறிந்து கெட்ட எண்ணங்கலைக் கொண்டு அரசர்குளம் அரண்மனையை பிடிக்க முயன்றான். அப்போது விஜயனும் அரசர்மகனும் எதிர்த்து போரிட்டு விரட்டினார்கள்
 
அரசர்குளம் ஆட்சிபகுதிகளில் அமைந்திருந்த அம்புலி ஆற்றிருக்கும் வில்லுனி ஆற்றுக்கும் இடைப்பட்ட சேந்தங்குடி,குளமங்கலம்,கொத்தமங்கலம்,கீரமங்கலம்,நகரம், பகுதிகலை உள்ளடக்கிய சேந்தங்குடி கிராமத்தை தலைமையிடமாக கொண்டு சேந்தங்குடிப்பாளையம் உருவாக்கி கி.பி.1486(கொல்லம் ஆண்டு 661) மாவீரன் விஜயத்தேவனை சேந்தங்குடி பாலையக்காரணக முடி சூட்டினார்கள். அதுமுதல் பதினைந்து பாளையக்காரர்கள் ஆட்சிபுரிந்து வந்துள்ளார்கள்.
சேந்தங்குடி பாளையக்காரர்கள் ஆட்சி தொடரும்போது அறந்தாங்கி தொண்டைமாண்கள் ஆண்டுவந்துள்ளனர். அம்புகோவில் பட்டுகோட்டை பகுதியில் பட்டு மழ்வராயர்கள் என்ற கள்ளர் குலத்தவர்கள் ஆண்டு வந்துள்ளனர். எனவே சிதம்பரம்,சீர்காழி சென்ற் ஆவாத்தேவன் கூத்தாடித்தேவன் குத்தாலம் சென்ற சிரம்பிராண்டி இவர்கள் அனைவரும் சேந்தங்குடி திரும்பி வந்தனர். இவர்கள் விஜயனின் சிற்றப்பன்மார்கள்
செவி வழி கதையை ஆராய்ந்து நிஜவரலாறை சிந்திப்போம்:
 
மேலே சொன்னது செவி வழிக்கதையாய் இருப்பினும் அதில் சில உண்மைகளும் இருக்கிறது. இதில் சொன்ன "அரசர்குளம்" என்பது இன்றைய பாலையவநத்தம் ஜமீன். அதன் அரசன் வணங்காமுடி பண்டாற தொண்டைமான். அதைபோல் சேந்தங்குடி ஜமீன் மூதாதையர்கள் பாண்டிய நாடு சிவகிரி,வடமலை பகுதிகளில் இருந்த பாண்டிய நாட்டு மறவர் குலத்தோர்கள். இவர்கள் பாண்டிய சேனையில் தளபதிகளாகவும் சிற்றரசர்களாகவும் திகழ்ந்துள்ளனர். பிற்கால பாண்டிய பேரரசர்களின் ஆட்சி டில்லி சுல்தாண்களால் சிதைந்த பின் குருந்தன்பிறை சூரைக்குடியிலிருந்து கிளம்பி சென்றுள்ளனர். சூரைக்குடி பகுதியை ஆண்டவன் விஜயாலயதேவன் என்பது அதைப்போல் சேந்தங்குடி ஜமீந்தார்களின் பெயர்கள் விஜயதேவர்கள் என்பது ஒற்றுமை ஆய்வுக்குரியது. இதைப்போல் சூரைக்குடி அரசர்களுக்கு தொண்டைமான் என பெயர் இருப்பது போல அறந்தாங்கி தொண்டைமான் அவர்களின் வழித்தோன்றல்கள் பிற்காலத்தில் பாலவநத்தம் பகுதிக்கு குடியேறியதாக நம்ப படுகிறது. பாலவனத்தம் ஜமீனும் சேந்தங்குடி ஜமீனும் சம்பந்திமார்கள். இருவருக்கும் இடையில் 500 வருடமாக திருமண சம்பந்தங்கள் உள்ளது. என்வே அறந்தாங்கி தொண்டைமானும் சூரைக்குடி விஜ்யாலயத்தேவன் சந்நிதியும் பாலவனத்தம்,சேந்தங்குடி அரசர்களின் மூதாதயர்களாக கருதலாம்
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அரசர்குளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது