நாணயச் சேகரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தரம்
வரிசை 30:
===இயற்கை அழகுசார் நாணயச் சேகரிப்பு===
நாணயங்கள் ஈரப்பதம், வெப்பம் போன்ற காரணிகளால் காலப்போக்கில் பாதிப்படைந்து விடுகின்றன. நாணயச் சேகரிப்பாளர்களின் கவனக்குறைவு இதற்கு பெரிய காரணமாக இருந்தாலும், இயற்கையாக பாதிப்படைந்த நாணயங்களின் அழகிற்காக சில நாணயச் சேகரிப்பாளர்கள் இவ்விதமான நாணயங்களை சேகரிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
 
==தரம் மற்றும் மதிப்பு==
நாணயச் சேகரிப்பில் நாணயங்களின் தரம் மிக முக்கியமான ஒன்றாகும். நாணயங்களின் அச்சிடப்பட்ட ஆண்டு, அதில் பொறிக்கப்பட்ட தகவல்கள், உருவங்கள் ஆகியவை நன்முறையில் தெளிவாக தெரிகின்ற வகையிலும், நாணயங்கள் அச்சிடப்பட்ட பொழுது இருந்த எடையின் அளவே இருப்பதும் தரத்தினை மதிப்பிடக் கூடிய வழியாகும்.
 
புழக்கத்தில் விடப்படாத நாணயங்கள் (UNC) முதல் தரமானவை. இந்த நாணயங்கள் அச்சிடப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டவையாக உள்ளன. நாணயச் சேகரிப்பாளர்கள் இந்த புழக்க்த்தில் விடப்படாத நாணயங்களை பெரிதும் விரும்புகின்றனர். இந்த நாணயங்களில் அனைத்து தகவல்களும் அப்படியே இருக்கின்றன என்பதோடு கீறல்கள், தேய்மானம் ஆகியவையும் இல்லாமல் இருப்பதால் பல ஆண்டுகள் பாதுகாப்பாக சேகரித்து வைக்க ஏதுவான ஒன்றாக உள்ள.
 
புழக்த்தில் விடப்பட்ட நாணயங்கள் அந்நாணயங்களின் தரத்திற்கு ஏற்றவாறு, நன்நிலையில் உள்ளவை, மோசமான நிலையில் உள்ளவை என்பவையாக தரம் பிரிக்கப்படுகின்றன. இவ்வாறான தரத்தின் அடிப்படையில் நாணயத்தின் சந்தை மதிப்பு அமைகிறது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/நாணயச்_சேகரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது