"திருநாவலூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,700 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎top)
'''திருநாவலூர்''', தமிழ்நாட்டின் [[விழுப்புரம் மாவட்டம்]], [[திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம்|திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில்]] உள்ள [[திருநாவல்லூர் ஊராட்சி]]யில் அமைந்த சிற்றூர் ஆகும். இது [[திருநாவலூர் (சட்டமன்றத் தொகுதி)|திருநாவலூர் சட்டமன்றத் தொகுதிக்கு]] உட்பட்டது. இங்கு புகழ் பெற்ற [[திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்]] எனும் சிவன் கோயில் உள்ளது. [[சுந்தரர்]] திருமணம் இங்கு நிகழ இருந்த போது சிவன் தடுத்தாட்கொண்டதாக வரலாறு உள்ளது.
 
== பெயர் ==
பழங்காலத்தில் நாவல் மரங்கள் நிறைந்திருந்ததால் நாவலூர் என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், பேச்சு வழக்கில் திருநாம நல்லூர் என்னும் பெயரே பெருவாரியாக புழங்குகறது.
 
== வரலாறு ==
ஒரு காலத்தில் முனையரையர் மரபு மன்னர்களின் தலைநகராயிருந்ததது இந்த ஊர் ஆகும். [[சைவம்|சைவ]] உலகில் திருநாவலூர் மிகவும் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது. சைவ [[நாயன்மார்]] அறுபத்து மூவருள் நால்வர் பிறந்து வாழ்ந்த ஊர் திருநாவலூர். அந் நால்வர்: [[சுந்தரமூர்த்தி நாயனார்]], சுந்தரரின் தந்தை [[சடைய நாயனார்]], தாய் [[இசைஞானியார் நாயனார்|இசை ஞானியார்]], சுந்தரரை எடுத்து வளர்த்தவரும் அப் பகுதியை ஆண்டவருமாகிய [[நரசிங்க முனையரைய நாயனார்]] என்பவராவர்.
==மேற்கோள்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2996858" இருந்து மீள்விக்கப்பட்டது