"வேகாக்கொல்லை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,812 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
விரிவாக்கம்
(விரிவாக்கம்)
'''வேகாக் கொல்லை''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தின்]] [[பண்ருட்டி வட்டம்|பண்ருட்டி வட்டத்தில்]] உள்ள ஒரு சிறிய கிராம பஞ்சாயத்து ஆகும். வேகாக்கொல்லையானது பண்ருட்டிக்கு 14.9 கி.மீ தொலைவிலும், கடலூரில் இருந்து 24.1 கிமீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 173 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த ஊரானது [[நெய்வேலி (சட்டமன்றத் தொகுதி)|நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கும்]], [[கடலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.
 
== அமைவிடம் ==
இவ்வூர் திருவதிகைக்குத் தெற்கே, 11 கி.மீ. தொலைவிலும், [[கெடிலம் ஆறு|கெடிலம் ஆற்றின்]] தென்கரைக்குப் பத்து கி.மீ. தொலைவிலும் உள்ளது.
 
== ஊர் குறித்த தொன்மம் ==
 
[[சிவபெருமான்]] முப்புர அரக்கர்களைப் புன்னகையால் எரித்த [[திருவதிகை]]ப் பகுதியில் உள்ள மண் எரியுண்டு வெந்த மண்ணாம்; அதனால் அம் மண் சிவப்பான செம்மண்ணாக இருக்கிறது. திருவதிகைப் பகுதிதான் எரியுண்டு வெந்ததே தவிர, வேகாக் கொல்லைப் பகுதி எரியுண்ணவோ - வேகவோ இல்லையாதலின் இங்குள்ள மண் வெள்ளை மண்ணாயிருக்கிறது. இந்த கதைக்கு ஏற்ப இந்த ஊரில் மண்ணெடுத்துச் செங்கல் சூளைபோட்டால் பாதிக் கல்லே வேகும் - பாதி வேகாது. இந்த இயற்கை அமைப்பு, சிவன் முப்புரம் எரித்த புராணக் கதையோடு முடிச்சு போடப்பட்டுள்ளது. சூளைக்கு வேகாத மண் உள்ள பகுதி வேகாக்கொல்லை என்று ஆனது.
 
இங்கே ஒரு சிவன்கோயில் உள்ளது. திருவதிகையில் முப்புர அரக்கர்களை எரித்த இறைவன் இங்கே வந்து களைப்பாறினாராம். களைப்பாறிய இடம் ‘களைப்பாறிய குழி’ என அழைக்கப்பட்டது. இது களப்பாக் குழி என இப்போது கொச்சையாக மருவி வழங்கப்படுகிறது. இங்கே எழுந்தருளியுள்ள சிவன் பெயர் களப்பானிசன், இப்பெயர், களைப்பாறிய ஈசன் என்னும் பெயரின் மரூஉ எனச் சொல்லப்படுகிறது.
== அருகே உள்ள கிராமங்கள் ==
 
* [[கனரா வங்கி]]
* தமிழ்நாடு கூட்டுறவு சங்கம்
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2997271" இருந்து மீள்விக்கப்பட்டது